Published:Updated:

வயது 80 என திருத்தம்: பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு

வயது 80 என திருத்தம்: பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
வயது 80 என திருத்தம்: பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
வயது 80 என திருத்தம்: பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு

கவுகாத்தி: பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது 80 என திருத்தம் செய்யப்பட்டதையடுத்து, டெல்லி மேல்சபை தேர்தலுக்கான அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அசாம் மாநிலத்திலிருந்து டெல்லி மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அசாம் கணபரிஷத் உறுப்பினர் குமார் தீபக் தாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதனால் ஏற்படுகிற 2 காலி இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து 5-வது முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். மற்றொரு இடத்துக்கு ஆதிவாசி இளம்தலைவர் சாண்டியஸ் குஜுர், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்தரப்பில், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் அமினுல் இஸ்லாம் போட்டியிடுகிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது வேட்புமனுவை கடந்த 15ஆம் தேதி, அசாம் சட்டசபை முதன்மைச் செயலாளர் ஜி.பி.தாஸ்சிடம் தாக்கல் செய்தார். இதேபோன்று மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது வயது 82 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிரந்தர முகவரி, ஒரு நிலைத்த வைப்பு முதிர்ச்சி அடையும் தேதி ஆகியவை குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தனது வயது 80 தான் என்பது உள்ளிட்ட தேவையான திருத்தங்கள் செய்து, புதிய பிரமாண பத்திரம் பிரதமர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்பு மனு பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்

##~~##
காங்கிரஸ் நிறுத்தியுள்ள மற்றொரு வேட்பாளரான சாண்டியஸ் குஜுர், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் அமினுல் இஸ்லாம் ஆகிய 3 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை அதிகாரபூர்வமாக தேர்தல் அதிகாரி ஜி.பி.தாஸ் நேற்று அறிவித்தார்.

வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (23ஆம் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். உடனே ஓட்டுகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.

126 இடங்களை கொண்ட அசாம் சட்டசபையில் காங்கிரசுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சியான போடோலேண்ட் மக்கள் முன்னணிக்கு 12 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 18 இடங்களே உள்ளன. எனவே பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.