Published:Updated:

"அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!" - தி.மு.க புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

"அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!" - தி.மு.க புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
"அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!" - தி.மு.க புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  "முதல்வர் அலுவலகத்தில் என்னை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அப்படித்தான் கே.சி பழனிசாமி உடனான சந்திப்பு நடைபெற்றது. தேடித்தேடிக் கண்டுபிடித்து ஆளுநரிடம் தி.மு.க-வினர் புகார் தெரிவித்துள்ளனர். அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நாட்டிலேயே, ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க-வின் ஆட்சி தான். எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசிப் பேசி தான் அரை சதவிகிதம் ஒட்டு வாங்குகிறார்கள், கூட்டணி சேராவிட்டால் அந்தக் கட்சி காணாமல் போய்விடும், கூட்டணி அமைத்தால் ஒன்றிப்போக வேண்டும் , அப்போது தான் கூட்டணி வலுப்பெறும். கூட்டணி அமைத்தவர்களுடன்  இணைந்து செயல்பட வேண்டும். தே.மு.தி.க-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

1990 பிறகு பி.ஜே.பி-யுடன் தி.மு.க ஏன் கூட்டணி அமைத்தது? அப்போது ஐந்து ஆண்டுகள் ஆட்சி சுகத்தை அனுபவித்த, தி.மு.க தற்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்களை விமர்சிக்கின்றனர் என்று தெரியவில்லை. பல ஆயிரம் கோடி திட்டங்களைப் பிரதமர் தமிழகத்துக்குத் தருகிறார், அது குற்றமா? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரமுடியாத திட்டங்களையெல்லாம், பி.ஜே.பி அரசு கொண்டு வருகிறது.. அந்த ஆத்திரத்தில் தான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன" என்றார்.