Published:Updated:

`நீங்கள் அரசியல் தற்குறி;பொது அறிவில்லாதவர்!' -அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது ம.தி.மு.க பிரமுகர் பாய்ச்சல்

குருபிரசாத்
`நீங்கள் அரசியல் தற்குறி;பொது அறிவில்லாதவர்!' -அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது ம.தி.மு.க பிரமுகர் பாய்ச்சல்
`நீங்கள் அரசியல் தற்குறி;பொது அறிவில்லாதவர்!' -அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது ம.தி.மு.க பிரமுகர் பாய்ச்சல்

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு, ம.தி.மு.க பிரமுகர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தே.மு.தி.க, -  அ.தி.மு.க கட்சிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில், கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டணிக்காக இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேசியது தவறு. சட்டமன்றத்தில் நாக்கை துருத்திக் கொண்டு விஜயகாந்த் நாகரிகம் இல்லாமல் பேசியது தான், அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம். தே.மு.தி.க கூட்டணிக்கு வந்தால் ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும். அது போதும். ம.தி.மு.க-வுக்கு ஐந்நூறு ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று தெரிந்தும் தி.மு.க அவர்களைக் கூட்டணியில் சேர்த்துள்ள போது, நாங்கள் ஆயிரம் ஓட்டு கிடைக்கும் தே.மு.தி.க-வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாதா?" என்று பேசினார்.

கனகராஜின் இந்தப் பேட்டி, தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தே.மு.தி.க-வை அவர் விமர்சனம் செய்திருப்பது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்கு உடனடியாக தே.மு.தி.க பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனகராஜ் எம்.எல்.ஏ-வுக்கு ம.தி.மு.க-வில் இருந்து பதில் வந்துள்ளது.

ம.தி.மு.க-வின் மாநில தீர்மான குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான கிருட்டிண சாமி, "நீங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்தும் உங்களுக்கு பொது அறிவு இல்லை.  நீங்கள் அரசியல் தற்குறி. நீங்கள் ஒரு முட்டாள். அரசியல் அடித்தளம் தெரியாதவர். ம.தி.மு.க-வை வம்புக்கு இழுத்தால் மரியாதை கெட்டுவிடும்" என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கனகராஜ்க்கு கிருட்டிண சாமி பதிவு தபால் அனுப்பியுள்ளார். இந்தத் தபால், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.