Published:Updated:

`சமூக வலைதளங்களில் வேட்பாளர்கள் செய்யக்கூடாதது எது?'- தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

`சமூக வலைதளங்களில் வேட்பாளர்கள் செய்யக்கூடாதது எது?'- தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
`சமூக வலைதளங்களில் வேட்பாளர்கள் செய்யக்கூடாதது எது?'- தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

நாட்டின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நிற்கப்போகிற வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் முக்கியமான பிரசாரக் களமாக இருக்கப்போவது ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்கள்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதை உணர்ந்த தேர்தல் ஆணையமும் குறிப்பாக, வேட்பாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது குறித்து சில நெறிமுறைகளை வகுத்துள்ளனர். இவற்றை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதைக் கவனிக்க தேர்தல் ஆணையம் சார்பாக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி;

``வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது வாக்காளர் தங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் குறித்த கணக்குகள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

தங்களுடைய அரசியல் சார்ந்த விளம்பரங்களைப் பதிவிடுவதற்கு முறையான அனுமதி வாங்க வேண்டும். 
அனுமதியின்றி அங்கு பதிவேற்றம் கூடாது.

வேட்பாளர் தங்களது பிரசாரத்துக்குச் செய்யப்படும் செலவுகளில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்குச் செலவிடப்படும் தொகையையும் சேர்க்க வேண்டும். 

இந்திய ராணுவம் குறித்த படங்களையும், செய்திகளையும் தேர்தல் பிரசாரத்துக்காக சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது.

இதில் ஏதேனும் விதிமீறல் இருப்பின் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தங்களின் பிரசாரத்துக்காக  எதிர்த்தரப்பின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்."

இந்த விதிமுறைகள் எல்லாம் எந்த அளவுக்குச் சரியாக கண்காணிக்கப்பட்டு களை எடுக்கப்படும் என்பதை நாம் பார்க்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.