Published:Updated:

ரூ.11 கோடியில் தேர்தல் விளம்பரம்: ஷீலாவிடம் வசூலிக்க லோக் ஆயுக்தா பரிந்துரை

ரூ.11 கோடியில் தேர்தல் விளம்பரம்: ஷீலாவிடம் வசூலிக்க லோக் ஆயுக்தா பரிந்துரை
ரூ.11 கோடியில் தேர்தல் விளம்பரம்: ஷீலாவிடம் வசூலிக்க லோக் ஆயுக்தா பரிந்துரை
ரூ.11 கோடியில் தேர்தல் விளம்பரம்: ஷீலாவிடம் வசூலிக்க லோக் ஆயுக்தா பரிந்துரை

டெல்லி: சட்டப்பேரவை தேர்தல் விளம்பரத்துக்காக அரசு பணம் 11 கோடி ரூபாயை செலவு செய்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது குறைந்த விலையிலான வீடுகள் கட்டித் தருவதாக முதல்வர் ஷீலா தீட்சித் வாக்குறுதி அளித்தார்.

அப்போது, இந்த திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்தாண்டு ஜனாதிபதிக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, முதல்வர் ஷீலா தீட்சித் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே, டெல்லி மாநில பா.ஜக. தலைவர் விஜேந்திர குப்தா, முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி லோக் ஆயுக்தாவில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான விளம்பரங்களுக்கு ஷீலா தீட்சித் மொத்தம் ரூ22 கோடியை செலவு செய்துள்ளார். இதில் ரூ.11 கோடி, அரசு பணம். இதனை முதல்வரிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

##~~##
இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா, முதல்வர் ஷீலா தீட்சித் செலவிட்ட அரசுப் பணம் ரூ11 கோடியை அவரிடம் இருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரையில், அரசுகள் தங்களது வளர்ச்சித் திட்டங்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது லோக் ஆயுக்தா.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் ஜனாதிபதிக்கு லோக் ஆயுக்தா மீண்டும் பரிந்துரை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.