Published:Updated:

தேர்தல் தேதியில் மாற்றம் தேவையா... #vikatansurvey

துரைராஜ் குணசேகரன்

தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடைபெற இருப்பதால் தேர்தல் பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் மற்றும் வழக்குகள் தொடர்ந்துள்ளார்.

தேர்தல் தேதியில் மாற்றம் தேவையா... #vikatansurvey
தேர்தல் தேதியில் மாற்றம் தேவையா... #vikatansurvey

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அதிகாரபூர்வ வாக்குப்பதிவு தேதி வெளியாவதற்கு முன்பு, தமிழகத்தில் பல்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலவின. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, மதுரை சித்திரைத் திருவிழா, கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, திருவண்ணாமலை கிரிவலம், தேனி கண்ணகி கோயில் திருவிழா போன்றவற்றைக் காரணம்காட்டி, தேர்தலை வேறு தேதியில் மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் தேர்தல் தேதி தொடர்பான சர்வேயில் பங்கேற்று உங்களின் பதில்களை அளியுங்கள்...

loading...