Published:Updated:

`கூட்டணிக் கதவை மூடிவிட்டோம்; தனித்துதான் போட்டி!'- தீபா சீரியஸ் பேட்டி

`கூட்டணிக் கதவை மூடிவிட்டோம்; தனித்துதான் போட்டி!'- தீபா சீரியஸ் பேட்டி
`கூட்டணிக் கதவை மூடிவிட்டோம்; தனித்துதான் போட்டி!'- தீபா சீரியஸ் பேட்டி

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ``தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அ.தி.மு.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்களின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அ.தி.மு.க-வுடனான விருப்பத்தை தெரிவித்தார்கள். என்றுமே அ.தி.மு.கவை எதிர்த்து நாங்கள் பேசியது இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.வை கட்டுப்படுத்தியது போன்றவற்றால் கருத்து தெரிவித்தேன். எல்லா தொகுதியிலும் வேட்பாளர் தேர்வு நடத்தப்படும். எந்தத் தொகுதியில் சிறப்பாக செயல்படமுடியுமோ அங்கு போட்டியிடுவோம். இரண்டு மூன்று மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க-வும் டி.டி.வியும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

அ.தி.மு.க, டி.டி.வி எங்கள் பேரவை என அனைத்திலும் சேர்த்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். விருப்பமனு பெற்ற பின்னர் தமிழக அளவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். கூட்டணிக் கதவுகள் பெரும்பான்மை மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் எங்களை யாரேனும் அழைத்தால் அது குறித்து ஆலோசிப்போம். இன்று வரை பல்வேறு அழுத்தத்துக்குப் பின்னும் நான் தொண்டர்களின் ஆதரவோடு இருக்கிறேன். அ.தி.மு.க மட்டுமல்ல பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்பட்டது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பதான் தனித்துப் போட்டி முடிவு எடுத்தோம். எந்தக் காலத்திலும் சசிகலா குடும்பத்துடன், அதாவது டி.டி.வி உள்ளிடோருடன் கூட்டணி இல்லை. தி.மு.க-வுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம். இடைத்தேர்தலில் அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் போட்டியிடுவதாக இருந்தால் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இதுவரை நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை'' என்றார்.