Published:Updated:

சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M
சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?
சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?
சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?

``தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் சீட் பங்கீட்டுக்கு முன்னதாகவே சேலம் மக்களவைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால்  தற்போது சேலம் மக்களவை தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் சேலம் காங்கிரஸார் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். சேலம் மக்களவை தொகுதி காங்கிரஸுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க-வுக்கு எப்படிக் கொடுக்கப்பட்டது. என்று பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு,  ``1984-க்குப் பிறகு சேலம் மக்களவை தொகுதியில் தி.மு.க மக்களவை உறுப்பினராக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சேலம் தி.மு.க-வில் வீரபாண்டி ராஜா, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வகணபதி எனப் பல உட்கட்சி கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கிறது. இதைச் சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே பெரும்பாலும் ஒதுக்கி வந்தது.

சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?

அதையடுத்து, இந்த மக்களவை தேர்தலிலும் சேலம் தொகுதி காங்கிரஸுக்கே கிடைக்குமென அனைவரும் எதிர்பார்த்தோம். காங்கிரஸ் சார்பாக சேலத்தில் களம் காணப்போகும் வேட்பாளர்  தங்கபாலுவா, மோகன் குமாரமங்கலமா என்ற நிலை இருந்து வந்தது. மோகன்குமாரமங்கலம் ஒரு வருடமாகச் சேலத்தில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். தங்கபாலுவும் தன் ஆதரவாளர்களிடம் சேலம் தொகுதி நமக்குத் தான் என உறுதியளித்தார். இதனால் காங்கிரஸார் உற்சாகமாக வேலை பார்த்து வந்தார்கள்.

இந்த நிலையில், கடைசிகட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது  நாங்கள் கொடுத்த பட்டியலில் கிருஷ்ணகிரி, சேலம் இரண்டு மக்களவை தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம். ஆனால், தி.மு.க இந்த இரண்டு தொகுதியில் ஒன்றை மட்டுமே கொடுக்க முடியும். நீங்களே ஏதாவது ஒன்றைத்  தேர்வு செய்து கொள்ளுங்கள். இரண்டு தொகுதியையும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்கள். நாங்களும் எவ்வளவோ கேட்டும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

சேலம் மக்களவை காங்கிரஸிடமிருந்து எப்படி தி.மு.க வசம் போனது?

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸின் அகில இந்திய செயலாளரும், கோவா மாநிலத்தின் பொறுப்பாளருமாக இருக்கும் செல்லக்குமாருக்கு கொடுப்பதாகத் தலைமை உறுதி செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் தி.மு.கவும் சேலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மக்களவை தொகுதியாக இருப்பதால் நாங்கள் நேரடியாகப் போட்டியிடுவதுதான் கெளரவமாக இருக்குமெனக் கருதினார்கள். அதனால் சேலம் மக்களவை தொகுதியை தி.மு.க-வுக்கே விட்டுக் கொடுத்தோம்'' என்கிறார்கள்.