Published:Updated:

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு - கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படாததால் சர்ச்சை

சிந்து ஆர்
கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு - கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படாததால் சர்ச்சை
கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு - கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படாததால் சர்ச்சை

கேரளத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு - கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படாததால் சர்ச்சை

கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாலக்காடு வி.கே.ஸ்ரீகண்டன், சாலக்குடி பென்னி பெகன்னான், ஆலத்தூர் ரம்யா ஹரிதாஸ், மாவேலிக்கர தொகுதியில் கொடிக்குந்நில் சுரேஷ், கண்ணூர் தொகுதியில் காங்கிரஸ் செயல் தலைவர் கே.சுதாகரன், திருச்சூர் தொகுதியில் டி.என்.பிரதாபன்,  பத்தனம்திட்டா தொகுதியில் ஆன்றோ ஆன்றணி, எர்ணாகுளம் ஹைபீ ஈடன், இடுக்கி டீன் குர்யகோஷ்,  கோழிக்கோடு எம்.கே.ராகவன், காசர்கோடு தொகுதிக்கு ராஜ்மோகன் உண்ணித்தானம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு - கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படாததால் சர்ச்சை

எர்ணாகுளம் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கே.வி.தாமஸுக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக ஹைபி ஈடனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கே.வி.தாமஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய எம்.பி.க்களில் தனக்கு மட்டும் சீட் வழங்காமல் இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக கே.வி.தாமஸ் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கே.சி.வேணுகோபாலன் ஆகியோர் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறியதால் அவர்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.