Published:Updated:

மேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி?

மேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட்  - காங்கிரஸ் கூட்டணி?
மேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி?

ந்தியா முழுவதும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. தமிழகத்தில் ஏறக்குறைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட்  - காங்கிரஸ் கூட்டணி?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல்  தனித்து போட்டியிடுகின்றார். அதே வேளையில் தமிழக அளவில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற கூட்டணிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட்  - காங்கிரஸ் கூட்டணி?

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ``முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இன்னும் 4 தொகுதிகள் மீதமுள்ளன. காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட்களுடன் கூட்டணி வைப்பார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அளவில் மார்க்சிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.