Published:Updated:

மட்டன் பிரியாணி ரூ. 200; சிக்கன் பிரியாணி ரூ.180!- விலைப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

மட்டன் பிரியாணி ரூ. 200; சிக்கன் பிரியாணி ரூ.180!-  விலைப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மட்டன் பிரியாணி ரூ. 200; சிக்கன் பிரியாணி ரூ.180!- விலைப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போது வாங்கும் பொருள்களின் விலைப் பட்டியலை நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். தற்போது அனைத்து தலைவர்களும் பிரசார களத்தில் மிகவும் பிஸியாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், பிரசாரத்தின்போது வாங்கும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய் வரையும் செலவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேட்பாளர்கள் செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கும் கணக்குக் காட்டுவதற்கான விலைப் பட்டியல் என சுமார் 208 பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, தண்ணீர், இளநீர், சால்வை, பேனர், போஸ்டர், துண்டுப் பிரசுரம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக விலை வழங்கப்பட்டுள்ளது.

விலைப் பட்டியல்

மட்டன் பிரியாணி -  ரூ.200
சிக்கன் பிரியாணி - ரூ.180
டிபன் -  ரூ.100
வெஜிடபிள் பிரியாணி - ரூ.100
மீல்ஸ் - ரூ. 100
வெஜிடபிஸ் ரைஸ் - ரூ. 50
டீ, காபி, குளிர்பானங்கள் - ரூ.75 (ஒரு லிட்டர்)
தண்ணீர் பாட்டில் - ரூ. 20 (ஒரு லிட்டர்)
இளநீர் - ரூ.40 
சால்வை - ரூ. 150
புடவை - ரூ. 200
டி-ஷர்ட் - ரூ. 175
பூக்கள் - ரூ. 60
தொப்பி - ரூ. 50
பிளீச்சிங் பவுடர் - ரூ.90 (ஒரு கிலோ)
பூசணி - ரூ.120
வாழைமரம் - ரூ.700
தொழிலாளர்கள் சம்பளம் - 450 (8 மணிநேரத்துக்கு)
டிரைவர்  சம்பளம் - ரூ.695 (8 மணி நேரத்துக்கு)
பட்டாசுகள் - ரூ.600 (1,000 வாலா)
மேளதாளங்கள் - 4,500 ( 4 மணி நேரத்துக்கு)
கல்யாண மண்டபம் - 2000 முதல் 6000 ரூபாய் வரை ( ஒரு நாள்)
ஏ.சி அறைகள் - ரூ. 9,300 மற்றும் வரி ( 5 ஸ்டார்)
ஏ.சி அறைகள் - ரூ. 5,800 மற்றும் வரி ( 3 ஸ்டார்)
எல்.இ.டி திரைகள் - ரூ. 12,000 (ஒரு நாளுக்கு)