Published:Updated:

`3 டாக்டர்கள்; 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள்' - மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள்!

`3 டாக்டர்கள்; 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள்' - மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள்!
`3 டாக்டர்கள்; 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள்' - மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள்!

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் கமல் இன்று வெளியிட்டுள்ளார்.


`தனித்து களம் காண்போம்; மக்களுடன்தான் எங்கள் கூட்டணி' என்று முழங்கியவர் கமல். அவருக்கு இது முதல் தேர்தல். கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில், பெரும் சவாலை எதிர்நோக்குகிறார் கமல். திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் சூழலில், கமல் தனித்துப் போட்டியிடுகிறார். விருப்பமனு தாக்கலின்போது, புதிய நடைமுறையைக் கையாண்டார் கமல். அதன்படி, தங்கள் கட்சியைச் சேராவதர்கள்கூட விருப்பமனு அளிக்கலாம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நேர்காணலில், கோவை சரளா இடம்பெற்றது நெருடலை ஏற்படுத்தியதாகக் கூறி,  தொழிலதிபர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகினார்.

மேலும் சில நிர்வாகிகள் விலகினர். தேர்தல் சமயத்தில் நிர்வாகிகள் விலகல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டுள்ளார். இது, முதல்கட்ட வேட்பாளர் என்றும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 24-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்தார். 3 டாக்டர்கள்; 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள், ஒரு முன்னாள் நீதிபதி என  முதல்கட்ட வேட்பாளர்களில் அனைவரும் படித்தவர்களாகவே உள்ளனர். 


வேட்பாளர் பட்டியல் : 

திருவள்ளூர் (தனி) - லோகரங்கன் 

சென்னை (வடக்கு) - மௌர்யா

சென்னை (மத்திய) - கமீலா நாசர்

ஸ்ரீபெரும்புதூர் - சிவகுமார்

அரக்கோணம் - ராஜேந்திரன் 

வேலூர் - சுரேஷ்

கிருஷ்ணகிரி - ஸ்ரீ காருண்யா

தருமபுரி - வழக்கறிஞர்  ராஜசேகர்

விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம் - எம் .பிரபு மணிகண்டன்

நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர்

திருச்சி - ஆனந்தராஜா

சிதம்பரம் - டி. ரவி

மயிலாடுதுறை - ரிஃபாயுதீன்

நாகை - கே. குருவையா

தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் 

தூத்துக்குடி - டி.பி.எஸ் பொன் குமரன்

திருநெல்வேலி - எம். வெண்ணிமலை

கன்னியாகுமரி - எபினேசர்

புதுச்சேரி - சுப்ரமணியன்