Published:Updated:

`முதல் வெற்றி வைகையிலிருந்துதான் தொடங்கும்' - வேட்பாளர் அறிமுக விழாவில் சூளுரைத்த சு.வெங்கடேசன்

`முதல் வெற்றி வைகையிலிருந்துதான் தொடங்கும்' - வேட்பாளர் அறிமுக விழாவில் சூளுரைத்த சு.வெங்கடேசன்
`முதல் வெற்றி வைகையிலிருந்துதான் தொடங்கும்' - வேட்பாளர் அறிமுக விழாவில் சூளுரைத்த சு.வெங்கடேசன்

தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் மூலக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

`முதல் வெற்றி வைகையிலிருந்துதான் தொடங்கும்' - வேட்பாளர் அறிமுக விழாவில் சூளுரைத்த சு.வெங்கடேசன்

மதுரை மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சு.வெங்கடேசனை கழகத்தினருக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதனன்று மாலையில் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி தலைமை வகித்தார். சிற்சில கழக நிர்வாகிகள் பேசினர். முன்னாள் மேயர் குழந்தைவேலு, ``தொழிலாளர் வர்க்கத்துக்கும்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நலன் செய்யும் கூட்டணி இது" என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் பேசுகையில், ``யாராலும் குறை சொல்ல முடியாத மனிதர், வெங்கடேசன். இவருக்குச் சரிநிகர் சமமாகப் போட்டியிட எதிர்த் தரப்புகளில் எவருமில்லை. நேர்மையானவர், இவர். மக்களவைக்குச் செல்லக் கூடிய முழுத் தகுதியும் இவருக்கு உண்டு. வேட்பாளர் வெங்கடேசன் அல்ல, வெற்றி வெங்கடேசன்" என்றார்.

கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், தேர்தல் பறக்கும் படையினர் திடீரென அரங்கினுள் நுழைந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. காவல்துறை மற்றும் வீடியோகிராபரோடு வந்த பெண் அதிகாரி ஒருவர் சரசரவென அரங்கினுள்ளே வந்தார். மேடையருகே சென்றதும் நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்து அவரை வெளியேற்றினர். பின்னர், அந்தப் பெண் அதிகாரியிடம் விசாரித்ததில், ``இது நார்மல் மேற்பார்வைதான். செலவு, வந்திருக்கும் ஆள்கள், கூட்டத்தின் நேரம் உள்ளிற்றவற்றைப் பதிவு செய்யவே வந்துள்ளோம்" என்றார். 

தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தை வழிநடத்தி தொகுத்துப் பேசிய கோ.தளபதி, ``கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதாப்பா" எனக் கூட்டத்தினரை அடேன்சன் அண்டு அலர்ட் மோடிலேயே வைத்திருந்தார். `` `அவுங்க' பணம் தரலாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். ஆனா, நாம ஜெயிக்கணும். அதுக்கு உழைக்கணும். மக்களைச் சந்திக்கணும்" என்று பூஸ்ட் ஏற்றினார். ``நம்ம தலைவர் கூட்டம் நடக்கப் போகுது. ஆட்களைத் திரட்டி வந்திரணும்யா. கூட்டம் முடியுற வரைக்கும் இடையில எழுந்திருச்சுப் போகாதவங்களா பார்த்து டிரெயினிங் கொடுத்துக் கூட்டி வாங்கய்யா. நல்லாக் கேட்டுக்கோங்கப்பா, எலக்சன் வரைக்கும் அ.தி.மு.ககாரங்கக்கிட்ட யாரும் தொடர்பே வச்சுக்கக் கூடாது" என்று கறாராகச் சொன்னார் தளபதி. மேடைக்குச் சத்தம் எட்டாது என்பதால் கடைசி வரிசைகளில் இருந்தவர்களால் மட்டும் வசதியாகச் சிரித்துக்கொள்ள முடிந்தது. 

`முதல் வெற்றி வைகையிலிருந்துதான் தொடங்கும்' - வேட்பாளர் அறிமுக விழாவில் சூளுரைத்த சு.வெங்கடேசன்

நிறைவாக வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசினார். ``தி.மு.கவினர் எஃகு போன்ற உறுதியோடு இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்ற வெறி, கழக உடன்பிறப்புகளின் கண்களில் தெரிகின்றது. மதுரை மக்களின் கனவான மெட்ரோவைக் கொண்டு வருவேன் என அறிக்கையில் ஸ்டாலின் உறுதிகூறியிருக்கிறார். ஸ்டாலினுக்குத் தர இருக்கின்ற முதல் வெற்றி, வைகையிலிருந்துதான் தொடங்கும்". தனது வழக்கமான இடிமுழக்கப் பேச்சால் மொத்த அரங்கையும் அதிரச் செய்தார், எழுத்தாளர் டு வேட்பாளர் சு.வெங்கடேசன்.