Published:Updated:

அனல்பறக்கும் தேர்தல் களம்: ராகுல் காந்திக்கு எதிராக பி.ஜே.பி களமிறக்கிய மத்திய அமைச்சர்!

அனல்பறக்கும் தேர்தல் களம்: ராகுல் காந்திக்கு எதிராக பி.ஜே.பி களமிறக்கிய மத்திய அமைச்சர்!
அனல்பறக்கும் தேர்தல் களம்: ராகுல் காந்திக்கு எதிராக பி.ஜே.பி களமிறக்கிய மத்திய அமைச்சர்!

க்களவைத்  தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து. காங்கிரஸ் சில தினங்களுக்கு முன்பு குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை உள்ளடக்கிய 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் சோனியா காந்தி ரேபரலி தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (மார்ச் 21-ம் தேதி) பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 184 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பி.ஜே.பி-யின் முக்கிய நிர்வாகியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்

அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இந்த முதல்கட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அதேபோல் மோடி, ராஜ்நாத் சிங் , அமித் ஷா போன்ற பி.ஜே.பி-யின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இதில் இடம் பெற்றிருந்தன. கடந்த தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி இந்தத் தேர்தலிலும் வாரணாசித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக பி.ஜே.பி நிறுத்தும் வேட்பாளர் யார் என்பது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதி இரானி கடந்த தேர்தலில் அதே தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.