Published:Updated:

கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்

கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்
கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்

மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும், கையில் மண்சட்டி ஏந்தியும் இரண்டு விவசாயிகள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பேச்சாக இருக்கிறது.

கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை தடைசெய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைத் தடை செய்யக் கோரியும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இரண்டு விவசாயிகள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனுத் தாக்கல் செய்தனர். 

கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், மத்திய பா.ஜ.க அரசு மற்றும் மோடி அரசுக்கு துணை புரியும் தமிழக அரசையும் கண்டித்து, பதாதைகள் ஏந்தியும், கையில் மண்சட்டி ஏந்தியபடியும், கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்தும் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலமாக வந்த விவசாயிகளில், நீர், நிலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இரண்டு பேர் மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். 

கையில் மண்சட்டி; கழுத்தில் மது பாட்டில் - மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள்

மத்திய, மாநில அரசுகளின் இந்தத் திட்டங்களால், விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தும் நிலை விரைவில் ஏற்படும் என்பதை உணர்த்தவே, கையில் மண்சட்டி ஏந்தி வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.