Published:Updated:

`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்!’ - தங்க தமிழ்ச்செல்வன் 

`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்!’ - தங்க தமிழ்ச்செல்வன் 
`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்!’ - தங்க தமிழ்ச்செல்வன் 

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனுக்கு தேனி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து போட்டியிடும் அ.ம.மு.கவின் தங்கத் தமிழ்செல்வன் இன்று மதுரை மாவட்டத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

பிரசாரம் தொடங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன், ``இந்தியாவில் பா.ஜ.கவுக்கும், தமிழகத்திலும் மாற்றம் வேண்டும் என்பதுதான் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய காரணமாக உள்ளது. புதிய தலைமையை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த புதிய தலைமை டி.டி.வி.தினகரனே, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. டி.டி.வி.தினகரன், தேனி தொகுதியில் வெற்றிபெற்று அங்கயே தங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-ஸின் குடும்பத்தினர் மன்னராட்சி செய்து வருகின்றனர். ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

வாரிசுக்கு இடம் அளிக்காமல் தொண்டனுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சி அ.ம.மு.க. சின்னம் இல்லை. கட்சி பதிவில்லை என்றபோதிலும் தேர்தலில் போட்டியிட பலரும் தயாராக இருப்பது எங்கள் கட்சியின் பிரமாண்டத்தைக் காட்டுகிறது. தேனியில் மருத்துவக் கல்லூரி, சாலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை டி.டி.வி. தினகரன் கொண்டுவந்தார். மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை தேனிக்கு கொண்டுவர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். தேனி தொகுதியில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ளும் என நம்புகிறோம். ஓபிஎஸ் குடும்பத்தினர் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்கமாட்டார்கள்; அ.ம.மு.கவிற்குத்தான் வாக்களிப்பார்கள்’’ என்றார்.