Published:Updated:

``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்
``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்


``வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாற்றத்தின் தொடக்க விழா” என்ற பெயரில் கோவை கொடிசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் பிரமாணத்தை வெளியிட்டார்

கடந்த 20 -ம் தேதி, புதுச்சேரி உள்ளிட்ட 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார்... கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யத்தினர் மத்தியில் எகிறிக்கிடந்த நிலையில், கோவையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாற்றத்தின் தொடக்க விழாவை வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர் மக்கள் நீதி மய்யத்தினர். மக்கள் திரளை இரண்டாகப் பிரித்து, நடுவே அமைக்கப்பட்டிருந்த நடைமேடையின் வாயிலாக என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன், மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில்  கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். அதனையடுத்து, விழா தொடங்கியது. 

``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

தலைமை உரையாற்றிய கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், ``பல விஷயங்களுக்குப் பெயர்போனது கொங்கு மண்டலம். இந்தப் புது அரசியல் மாற்றமும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஊழல் கட்சிகளே வெளியேறுங்கள் என்கிற முழக்கத்தை இங்கிருந்து ஆரம்பிக்கப்போகிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களும் வெளியேற வேண்டும். சிலர் கொங்கு மண்டலத்தை தங்களது கோட்டையாக நினைக்கிறார்கள். ஆகையால், இங்கிருந்துதான் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். பெரிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 20 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறார்கள். ஆனால், நாம் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம். இடைத்தேர்தலிலும், 18 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம். மாற்றம் ஆரம்பமாகப்போகிறது” என்றபடி அமர்ந்தார்.

``வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” - கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

இறுதியாகப் பேசிய கமல்ஹாசன், தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், பி.ஜே.பி  அ.தி.மு.க ஆட்சியிலும் நடந்த அவலங்களை வீடியோவாக வெளியிட்டு, ``இதையெல்லாம் மக்கள் மறந்துவிடக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்காவிட்டாலும், நான் மேடைதோறும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்” என்றவர், மக்கள் நீதி மய்யத்தினரை வெற்றிபெற வைத்தபிறகு, அவர்கள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால், அவர்களை நீக்குவதற்கு நீங்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கத் தேவை இல்லை. மக்கள் தரப்பிலிருந்து ஒரு குழு, பிரதிநிதி தரப்பிலிருந்து ஒரு குழு மற்றும் நான் கூடி விசாரிப்போம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் ராஜினாமா கடிதம் உங்களைத் தேடி வரும். வெற்றி பெற்றதுமே அவர்கள் போடும் முதல் கையெழுத்து அந்த உறுதிமொழிக்குத்தான் என்று அதிரடிகிளப்பினார்.

தொடர்ந்து , ``ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டு, தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் அகற்றப்படும். ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம்பேருக்கு வேலை. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுவோம். குடிசைகள் இல்லா தமிழகம் காண்போம், தமிழகத்தின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். பெண்களுக்கு விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். ஊழலுக்கு எதிராக இருக்கும் பல் இல்லா லோக் ஆயுக்தா சட்டத்தை இன்னும் வலுவாக்கி, லோக் ஆயுக்தா அதிகாரிகளை நியமிப்போம்" என்கிற ஏழு உறுதிமொழிகளையும் கூட்டாட்சி முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், விவசாயம் நலன், மக்கள் நலன் உள்ளிட்ட ஏழு முக்கியத்துறையின் கீழ் பிரகடனங்களை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். ``காஞ்சிபுரம் எம்.தங்கராஜ், திருவண்ணாமலை ஆர்.அருள், ஆரணி வி.ஷாஜி, கள்ளக்குறிச்சி ஹெச்.கணேஷ், நாமக்கல் ஆர்.தங்கவேலு, ஈரோடு சரவணக்குமார், ராமநாதபுரம் ஜே.விஜயபாஸ்கர், கரூர் டாக்டர் ஹரிஹரன், பெரம்பலூர் வி.அருள்பிரகாசம், தஞ்சாவூர் சம்பத் ராமதாஸ், சிவகங்கை சிநேகன், மதுரை எம்.அழகர், தென்சென்னை ஆர்.ரங்கராஜன், கடலூர் வி.அண்ணாமலை, விருதுநகர் வி.முனியசாமி, தென்காசி கே.முனீஸ்வரன், திருப்பூர் வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சி ஆர்.மூகாம்பிகை ரத்தினம், கோயம்புத்தூர் டாக்டர் ஆர்.மகேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்.  

அதனையடுத்து சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார், ``பூந்தமல்லி பூவை ஜெகதீஸ், பெரம்பூர் வி.பிரியதர்ஷினி, திருப்போரூர் கருணாகரன் (இந்திய குடியரசு கட்சி), சோழிங்கர் மலைராஜன்(இந்திய குடியரசு கட்சி) குடியாத்தம் வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி), ஆம்பூர் நந்தகோபால், ஓசூர் ஜெயபால், பாப்பிரெட்டிப்பட்டி எம்.நல்ல தம்பி, அரூர் குப்புசாமி, நிலக்கோட்டை ஆர்.சின்னதுரை, திருவாரூர் அருண் சிதம்பரம், தஞ்சாவூர் துரையரசன் (வளரும் தமிழகம் கட்சி), மானாமதுரை ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தங்கவேலு (வளரும் தமிழகம் கட்சி), பெரியகுளம் பிரபு, சாத்தூர் சுந்தர்ராஜ் (தமிழ் விவசாயிகள் சங்கம்) பரமக்குடி உக்கிரபாண்டியன், விளாத்திக்குளம் நடராஜன் (தமிழ் விவசாயிகள் சங்கம்), ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோரை வேட்பாளராக அறிவித்த கமல், இதில் கமல்ஹாசன் பெயர் கிடையாது... பல்லக்கில் ஏறி அமர்வதைவிட பல்லக்கைத் தூக்கிச் சுமப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்" என்று முடித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு