Published:Updated:

`நான் செய்ததைப் பட்டியலிடவா?!'- பொன்னாருக்கு சவால்விடும் வசந்தகுமார்

`நான் செய்ததைப் பட்டியலிடவா?!'- பொன்னாருக்கு சவால்விடும் வசந்தகுமார்
`நான் செய்ததைப் பட்டியலிடவா?!'- பொன்னாருக்கு சவால்விடும் வசந்தகுமார்

``நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை தடுத்து நிறுத்துவதுதான் எனது முதல் பணி'' என கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஆயரை சந்தித்து ஆதரவும், ஆசீர்வாதமும் பெற்றேன். கன்னியாகுமரி மாவட்டம் பெருமை வாய்ந்த மாவட்டம். சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் கொண்டுவந்து மாவட்டத்தை அழிக்கக்கூடாது. ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் தேவை. அதுதான் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

பொன்.ராதாகிருஷ்ணன் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டம் கொண்டுவந்ததாகக் கூறுகிறார். வளர்ச்சி என்பதை பேப்பரில் எழுதிகொடுத்தால் அது திட்டம் ஆகாது. அந்தப் பணத்தை கடலிலா கொண்டுபோய் கொட்டினார்கள். அந்தப் பணத்துக்கு கணக்கு கொடுக்கட்டும். அவர் ஏற்கெனவே பொய்சொல்லி ஆட்சிக்கு வந்தார். கல்வி உதவித்தொகை வாங்கித்தருவதாக பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி பதவிக்கு வந்தார். இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார். எம்.எல்.ஏ.வாக இருக்கும் நான் குமரி மாவட்டத்தில் 1500 பேருக்கு வேலைவாங்கிக் கொடுத்துள்ளேன்.

நாங்குநேரி மக்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது சரியல்ல. கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல சொந்தப் பணத்தில் ஜே.சி.பி. வாங்கிக் கொடுத்துள்ளேன். கொசு அடிக்கும் மிஷின் கொடுத்துள்ளேன். நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை தடுத்து நிறுத்துவதுதான் எனது முதல் பணி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.