Published:Updated:

`2.55 மணிக்கு வந்துட்டேன், வேட்புமனுத் தாக்கல் செய்ய விடல!'- வெளிநாட்டு வங்கிப்பணியை துறந்தவர் வேதனை

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் நிறைவடைகிறது.

`2.55 மணிக்கு வந்துட்டேன், வேட்புமனுத் தாக்கல் செய்ய விடல!'- வெளிநாட்டு வங்கிப்பணியை துறந்தவர் வேதனை

நீலகிரி தனித் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.மு.முக, ம.நீ.ம, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 15 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். அதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். நீலகிரி தனித் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கணேஷ் என்பவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இன்று மதியம் வேட்புமனுத் தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகமாக இயங்கும் ஊட்டி கலெக்டர் அலுவலகம் வந்தார். தாமதமாக வந்ததாகக் கூறி அவரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

`2.55 மணிக்கு வந்துட்டேன், வேட்புமனுத் தாக்கல் செய்ய விடல!'- வெளிநாட்டு வங்கிப்பணியை துறந்தவர் வேதனை

இதுகுறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் கணேஷ் கூறுகையில், ``நான் துபாயில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காகவும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கவும் எனது வங்கிப் பணியை துறந்து இந்தியா திரும்பினேன். தற்போது தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.டயில்யூ பயின்று வருகிறேன். அதேபோல ஊட்டி டி.ஆர் பஜார் பகுதியில் இயற்கை முறையில் ஸ்ட்ராபெரி விவசாயமும் செய்து வருகிறேன். மக்களுக்கு சேவை செய்ய தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தேன். தாமதமாக வந்ததாகக் கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியைக் கூட சந்திக்கவிடாமல் போலீஸார் மற்றும் அதிகாரிகள் தடுத்தனர்.

`2.55 மணிக்கு வந்துட்டேன், வேட்புமனுத் தாக்கல் செய்ய விடல!'- வெளிநாட்டு வங்கிப்பணியை துறந்தவர் வேதனை

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் என்பது அறிந்து இன்று ஒரே நாளில் அனைத்து ஆவணங்களையும் சரி செய்து வேட்புமனுத் தாக்கல் செய்ய மதியம் வந்தேன். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலக சாலையில் அரசியல் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் சாலையை மறித்து நின்று பிரசாரம் செய்துகொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து வர அரைமணி நேரத்துக்கு மேலானது. 3 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில், நான் சுமார் 2.55 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்துவிட்டேன். அதற்கான வீடியோ பதிவுகளைக் கூட சரிபார்த்து, என்னை வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், எனது தரப்பு நியாயத்தை அதிகாரிகள் கேட்காமல் வேட்புமனுத் தாக்கலுக்கான வாய்ப்புகள் இல்லை என நிராகரித்து வெளியேற்றினர், என வேதனையுடன் தெரிவித்தார்.