Published:Updated:

`நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்... ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது!’ - பிரசாரத்தில் அதிர்ந்த ஓ.பி.எஸ்

`நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்... ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது!’ - பிரசாரத்தில் அதிர்ந்த ஓ.பி.எஸ்
`நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்... ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது!’ - பிரசாரத்தில் அதிர்ந்த ஓ.பி.எஸ்

`மக்களுடன், மக்களாக டீக்கடையில் டீ குடித்தால் மக்களின் ஓட்டுக்களைப் பெற்றுவிடலாம் என்ற ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. ஏனென்றால் நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்’ என புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

`நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்... ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது!’ - பிரசாரத்தில் அதிர்ந்த ஓ.பி.எஸ்

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் புதுக்கோட்டை விராலிமலை தொகுதி இணைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள செக் போஸ்டில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது, ``காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது. எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டு வரவில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது ஜெயலலிதா கருணாநிதியிடம், `நீங்கள் மனது வைத்தால் காவிரி நடுவர் மன்றத்தை வலியுறுத்தி கொண்டுவரலாம்’ என்று கூறினார். ஆனால், அப்போது அதை அவர்கள் நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் காவிரி மேலாண்மை திட்டம் வாதாடி போராடி கொண்டு வரப்பட்டது. கருணாநிதியால் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை, அது தி.மு.க-வின் கையாலாகாத தனத்தைக் காட்டியது.

`நாங்களும் டீக்கடை நடத்தியவர்கள்தான்... ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது!’ - பிரசாரத்தில் அதிர்ந்த ஓ.பி.எஸ்

அப்போது, மக்களை ஏமாற்றி ஓட்டை மட்டும் வாங்கிச் சென்றார்கள். அவர்களுக்குத் தக்க பாடத்தை, இந்தத் தேர்தலில் புகட்ட வேண்டும். ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் 2021-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு அனைவருக்கும் வீடு கொடுத்து வீடு இல்லாதவர்கள் இல்லாத நிலைமை கொண்டு வரப்படும். பெண்களுக்காக அ.தி.மு.க அரசு தாலிக்குத் தங்கம், பேறுகால உதவி உள்ளிட்ட பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. பெண்களின் குடும்பச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் எந்த ஒரு குறையுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க காணாமல்போகும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், அவர்தான் காணாமல் போவார். அடிக்கின்ற தேர்தல் சுனாமியில் ஸ்டாலின் எங்கு போய் விழுவார் என்றே தெரியாது. அ.தி.மு.க ஒரு போதும் ஒழியாது. தொண்டர்கள் தலைவராவது அ.தி.மு.க-வில் மட்டும்தான். காங்கிரஸிலேயோ தி.மு.க-விலேயோ தொண்டர்கள் தலைவராக வர முடியாது. தனிப்பட்ட மனிதர்களின் துதிப்பாடல் அ.தி.மு.கவில் இல்லை. தீயிட்டு தமிழகத்தைக் கொளுத்துவதாக எங்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கிறார். நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா திரிந்து வருகிறோம். தி.மு.க ஆட்சியில்தான் தினகரன் பத்திரிகை அலுவலகம் கொளுத்தப்பட்டது. அவர்கள் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுதே, பிரியாணி மற்றும் பரோட்டா கடையில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சண்டையிட்டு வருகின்றனர். அ.தி.மு.க-வினர் எங்கு சாப்பிட்டாலும் காசு கொடுத்துதான் சாப்பிடுவார்கள். ஸ்டாலின் கடந்த தேர்தலில் முதல்வர் ஆகி விடுவோம் என்ற எண்ணத்தில் கலர் கலராக சட்டை பேன்ட் போட்டுக் கொண்டு வீதி வீதியாகச் சென்றார். டீக்கடையில் டீ குடித்தார் மக்களுடன் எளிமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். நாங்கள் டீக்கடையை நடத்தி உள்ளோம். சுனாமி பூகம்பமே வந்தாலும் அசையாத இயக்கம் அ.தி.மு.க’’ என்றார். அப்போது, கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.