Published:Updated:

`தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்’ - அடடே மோடி!

`தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்’ - அடடே மோடி!
`தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்’ - அடடே மோடி!

ஸ்ஸாம் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில், "தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்" என்று கூறினார். 

`தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்’ - அடடே மோடி!

பிரதமர் மோடி தன்னுடைய இளமைப் பருவத்தில் சிறிது காலம் தேநீர் விற்றார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, ​அவர் இதைச் சொல்லித்தான் தன்னை எளிமையான சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபராகக் காட்டி பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னரும்கூட, தன் மீது எதிர்க்கட்சிகள் விமர்சன கணைகளைத் தொடுக்கும் போதெல்லாம், தான் தேநீர் விற்ற ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான், ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, தான் பிரதமர் பதவியில் இருப்பது பிடிக்கவில்லை என்றெல்லாம் உருக்கமாகப் பேசுவார். 

இதனிடையே, கடந்த சில வாரங்களாக இந்த தேநீர் விற்ற கதையை விட்டுவிட்டு, நானும் காவல்காரன்தான்' எனப் பொருள்படும் 'மெய்ன் பி சௌக்கிதார்' என்ற பிரசாரத்தை மோடி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் தனது 'சாய்வாலா' ( தேநீர் விற்பவர்) பிரசாரத்தைக் கையிலெடுத்துள்ளார் மோடி. 

அஸ்ஸாம் மாநிலம், கோஹ்புரில் இன்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "காங்கிரஸ் அரசு 1970-களில் கடைப்பிடித்த கொள்கைகளினால்தான் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஊடுருவலால் ( வங்கதேசத்தவர்கள்) பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி இளைஞர்கள், காங்கிரஸ் கட்சி எவ்வாறு அஸ்ஸாம் மாநிலத்துக்குத் துரோகம் இழைத்தது என்பதை தங்களது வீட்டிலுள்ள முதியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 

நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை அஸ்ஸாம் மாநில மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா? அவர்களுக்கு (காங்கிரஸ்) நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறை கிடையாது. அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து அவர்கள் கவலைப்படுவார்களா? 

`தேநீர் விற்பவர்களின் வேதனையை ஒரு தேநீர் விற்பவரால்தான் புரிந்துகொள்ள முடியும்’ - அடடே மோடி!

காங்கிரஸ் கட்சி எப்போதுமே மக்களை ஏமாற்றுகிற கட்சி. ஆனால், 'சௌக்கிதார்' ( காவலாளி) ஊடுருவல், பயங்கரவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர். இந்த 'சௌக்கிதார்'தான் உங்களைப் போன்ற அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலன்களுக்காக, அவர்களது 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் வகையிலான 'பிரதம மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்ட'த்தைக் கொண்டு வந்தவர். 

'சாய்வாலா'க்களின் (தேநீர் விற்பவர்கள்) வேதனையை ஒரு 'சாய்வாலா' வால்தான் புரிந்துகொள்ள முடியும். இந்தச் 'சாய்வாலா' அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை முன்னேற்ற உறுதிபூண்டுள்ளேன்’’ எனப் பேசினார்.