Published:Updated:

``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

"அ.தி.மு.க தொண்டனை பா.ம.க-வினரை ஏவிவிட்டு அடிக்கிறீயே... நீயெல்லாம் அ.தி.மு.க-காரரா? ஓ.பி.எஸ் மந்திரி, அவரு மகன் வேட்பாளர். வாரிசு அரசியல் செய்றீங்களே... அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?" என்று கத்தினேன்.

``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

"அ.தி.மு.க தொண்டனை பா.ம.க-வினரை ஏவிவிட்டு அடிக்கிறீயே... நீயெல்லாம் அ.தி.மு.க-காரரா? ஓ.பி.எஸ் மந்திரி, அவரு மகன் வேட்பாளர். வாரிசு அரசியல் செய்றீங்களே... அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?" என்று கத்தினேன்.

Published:Updated:
``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

அ.தி.மு.க கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலையோடு ஓமலூரை அடுத்த சிந்தாமணியூரில் பிரசாரம் செய்தார். அப்போது செம்மலை, அன்புமணியிடம் கேள்வி கேட்ட அ.தி.மு.க தொண்டர் ஒருவரை கன்னத்தில் பளீர்... பளீர் என அறைந்த சம்பவம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

செம்மலையிடம் அடிவாங்கிய தொண்டர் செந்தில்குமாரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம். ``நான் ஓமலூரை அடுத்த சிந்தாமணியூர் ஓலைப்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன். எனக்குத் திருமணமாகி இரண்டு பசங்க, ஒரு பொண்ணு இருக்கு. நான் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 22 வருடங்களாக அ.தி.மு.க உறுப்பினராகவும், கிளைச் செயலாளராகவும் இருந்துவருகிறேன். எங்க அப்பா, அம்மா என்னை ஒழுக்கமாகவும், நாகரிகமாகவும் வளர்த்திருக்கிறார்கள். மது அருந்தும் பழக்கம் கிடையாது. குடும்பம், தொழில், கட்சியென்று கண்ணியமாக வாழ்ந்துவருகிறேன். அ.தி.மு.க-வை உயிர்மூச்சாக நேசிக்கக்கூடியவன். கடந்த மாதம் கட்சியில் 500 ரூபாய் செலுத்தி 50 பேரைக் கட்சி உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறேன். 31-ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, தருமபுரி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்துக்கு சிந்தாமணியூர் வருவதாகத் தகவல் வந்ததையடுத்து பொதுமக்களைத் திரட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தேன். அன்புமணியோடு எங்க எம்.எல்.ஏ செம்மலையும் வந்திருந்தார். அப்போது கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் என்னிடம், `உங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கவே தகுதி இல்லை. அ.தி.மு.க ஊழல் கட்சியென்று சொன்ன அன்புமணியோட எப்படி நீங்க கூட்டணி வச்சுகிட்டீங்க. 8 வழிச் சாலை போடுவதாகச் சொல்லி எங்களைச் சித்ரவதை செய்றாங்க. கட்சிக்காரன் நீதான் இதையெல்லாம் கேட்கணும். போய் நீ கேளு'னு என்னிடம் சொன்னார்கள்.   

இதையடுத்து அன்புமணியைப் பார்த்து, `அய்யா, கடந்த 5 வருஷமா எம்.பி-யாக இருந்தீர்களே... ஒருமுறைகூட எங்க ஊரு பக்கம் வரலைனு மக்கள் கேட்குறாங்க. நானும் உங்களைப் பார்க்கவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தீர்களே. உங்க தொகுதியில் உள்ள சிந்தாமணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாருங்க, பாழ்பட்டுக் கிடக்குது. நீங்க அமைச்சராக இருந்ததற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி மாற்றி இருக்க வேண்டாமா? குண்டுமணியூர் சாலை, குண்டும்குழியுமா கிடக்குது. எடப்பாடி அரசாங்கம் ஊழல் அரசாங்கமென்று ஆளுநர்கிட்ட புகார் கொடுத்தீர்களே... 8 வழிச் சாலைக்குப் போராடினீர்களே... இதெல்லாம் வேஷமா'னு கேட்டதற்கு, அருகில் இருந்த செம்மலை பளீர்...பளீர் எனக் கன்னத்தில் அடித்தார்.

அடியை வாங்கிக்கொண்டே, `சாதாரண மக்களாகிய நாங்க, சின்ன வாய்க்கால் வரப்பு சண்டைனு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துட்டாலே அவுங்ககூட ஒட்டு உறவு வச்சிக்க மாட்டோம். கல்யாணம், கருமாதிக்குப் போக மாட்டோம். நீங்க தலைவருங்க. கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி வச்சுகிறீங்களே... வெட்கமா இல்லையானு' கேட்டதும், செம்மலை பா.ம.க-வினரை ஏவிவிட்டு அடிக்க வைத்தார். ``கோடிக்கணக்கான தொண்டனின் குமுறல்களை வெளிப்படையா கேட்டது தப்பா? அ.தி.மு.க தொண்டனை பா.ம.க-வினரை ஏவிவிட்டு அடிக்கிறீயே... நீயெல்லாம் அ.தி.மு.க-காரரா? ஓ.பி.எஸ் மந்திரி, அவரு மகன் வேட்பாளர். வாரிசு அரசியல் செய்றீங்களே... அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அ.தி.மு.க தொண்டன் நீங்க கொடுக்கிற பொட்டலச் சோற்றைத் தின்னுட்டுப் போவானென்று நினைத்தீர்களா...' என்று கத்தினேன். இதைக்கேட்டு, செம்மலை பா.ம.க.-வினரிடம் கண்ணைச் சிமிட்டியதும் அவர்கள் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள்.

``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

நான் கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டேன். பிறகு, 108 ஆம்புலன்ஸில் ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கு, எனக்குச் சரியாகச் சிகிச்சை கொடுக்கவில்லை. அதையடுத்து, கோவைக்குச் சென்று முதல் உதவி சிகிச்சை செய்துகொண்டேன். பா.ம.க-வினர் தாக்கியதால் உடம்பில் பல இடங்களில் ரத்தக்கட்டு இருக்கிறது. நான் போதையில் தகராறு செய்ததாக செம்மலை காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்திருக்கிறார். நான், எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், செம்மலை வீட்டிலும் இரவு பகலாக இருந்தவன். என்னை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அம்மா இருந்தபோது எம்.எல்.ஏ., எம்.பி வேட்பாளருக்கு விருப்ப மனு கொடுத்தவன். செம்மலை மேட்டூர்த் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவரை அழைத்து வந்து எடைக்கு எடை பணம் கொடுப்பதாக வேண்டியவன். செம்மலை என் மீது நட்பும், பாசமும் உடையவர். நான் மது அருந்தவில்லை என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சத்தியம் செய்கிறேன். ஆனால், நான் மது அருந்தியதாகச் சொல்லும் செம்மலை சத்தியம் செய்யத் தயாரா?'' என்றார்.

இதுபற்றி எம்.எல்.ஏ.செம்மலையிடம் கேட்டதற்கு, ``நான் எப்படிப்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியும். ஊடகத்தினர் திட்டமிட்டே இதைப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அவர் என் கட்சிக்காரர். நல்ல பையன். என்மீது அதிகப் பற்றுடையவர். போதையில் பேசி இருக்கிறார். அன்புமணி பேசிக்கொண்டிருந்தபோது, `5 வருஷமா என்ன பண்ணின' என்று அவமரியாதை செய்வதைபோலக் கேட்டார். அதையடுத்து நான் அவர் வாயைப் பொத்தினேன். அடிக்கவில்லை. அதை, வீடியோவில் ஸ்லோமோஷனில் காட்டி அடிப்பதைப்போலச் சித்திரித்துவிட்டார்கள். நான் அவரை அடிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை'' என்றவரிடம், ``அவர் மது அருந்தும் பழக்கம் இல்லை என்கிறாரே?" என்றதற்கு, ``நான் யூகத்தின் அடிப்படையில் சொன்னேன். அவர் மது அருந்தினாரா, இல்லையா என்று கண்டுபிடிப்பதற்கு நான் டாக்டர் இல்லை'' என்றார்.

கழகத்திலேயே `கலகம்' பிறந்துவிட்டது.