Published:Updated:

லக்ஸரி கார் மோகம்; நிமிடத்துக்கொரு முறை மேக்கப்! - ஏ.சி.சண்முகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

லக்ஸரி கார் மோகம்; நிமிடத்துக்கொரு முறை மேக்கப்! - ஏ.சி.சண்முகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

கோடை வெப்பம் அனல் வீசிக்கொண்டிருந்தாலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை பணத்தால் குளிர்வித்து வருகிறார் ஏ.சி.எஸ். அவருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக துரைமுருகனும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கினார். ஐ.டி அஸ்திரத்தால் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் தென்படுகிறது. இதைத் தனக்குச் சாதகமாக மாற்றி வெற்றியடைவாரா?

Published:Updated:

லக்ஸரி கார் மோகம்; நிமிடத்துக்கொரு முறை மேக்கப்! - ஏ.சி.சண்முகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

கோடை வெப்பம் அனல் வீசிக்கொண்டிருந்தாலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை பணத்தால் குளிர்வித்து வருகிறார் ஏ.சி.எஸ். அவருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக துரைமுருகனும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கினார். ஐ.டி அஸ்திரத்தால் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் தென்படுகிறது. இதைத் தனக்குச் சாதகமாக மாற்றி வெற்றியடைவாரா?

லக்ஸரி கார் மோகம்; நிமிடத்துக்கொரு முறை மேக்கப்! - ஏ.சி.சண்முகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

வேட்பாளர் அறிமுகம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 1950-ம் ஆண்டு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஏ.சி.சண்முகம், சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், வேலூரில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பும் பெங்களூருவில் பி.எல் சட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிமுகத்தால் படிப்படியாக உச்சம் தொட்டார். 1980-ம் ஆண்டு ஆரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது திருமணத்தை 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்னின்று நடத்திவைத்தார். எம்.ஜி.ஆரின் அருகிலேயே இருந்ததால், ஏ.சி.சண்முகம் ஏறுமுகம் கண்டார். 1984-ல் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அ.தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழு செயலாளராகவும் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி புதிய நீதிக்கட்சியைத் தொடங்கினார். இவருக்குச் சென்னை மற்றும் பெங்களூருவில் மருத்துவமனைகளும் வேலூரில் நட்சத்திர விடுதியும் உள்ளன.

தற்போது வேலூர் தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்குகிறார். `காஸ்ட்லி’ வேட்பாளராகக் கருதப்படும் ஏ.சி.எஸ், 192 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 

கூட்டணி பலம்! 

வேலூர் தொகுதியில் நிறைந்திருக்கும் சொந்தச் சமூக பலத்தைப் பிரதானமாகப் பார்க்கிறார் ஏ.சி.எஸ். 1984-ல் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஏ.சி.சண்முகம். கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் வேலூர் தொகுதியில் களம் கண்ட ஏ.சி.சண்முகம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரிடம் தோற்றார். இந்த முறை அதே வேலூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் நிற்பது பிளஸ். கடந்த தேர்தலில் அவருக்கு எதிராகத் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி, `இந்த முறை ஏ.சி.எஸ்ஸுக்கு வாக்களியுங்கள்' எனக் கேட்பதுதான் முரண். இந்த அதிருப்தியெல்லாம் மறைந்து, `எனக்குச் சிறந்த தேரோட்டியாக வீரமணி இருக்கிறார்' என நெகிழ்கிறார் ஏ.சி.எஸ். 

5 சுவாரஸ்ய தகவல்கள்:  

1. அடிக்கடி தலைமுடியை சீப்பால் படியவைத்தும் முகத்துக்குப் பவுடர் பூசியும் தன்னை அழகாக காட்டிக் கொள்ள முற்படுவது.

2. எம்.ஜி.ஆரின் மூன்றெழுத்தைப் போலவே, ஏ.சி.எஸ் என அழைப்பதையே விரும்புவது.

3. சர்வதேச சந்தையில் பிரபலமாகும் விதவிதமான லக்ஸரி கார்களை உடனே வாங்கிவிடுவது.

4. பாதுகாப்புக்காக பௌன்சர்கள் புடைசூழ வெளியில் சுற்றுவது.

5. சமூக சேவை செய்வதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதவர்.

டாப் 3 விமர்சனங்கள்: 

1. ஒரு சமூக இயக்கத்துக்கான தலைவராக இருப்பதால் பிற சமூக மக்களிடம் அவர் எடுபடவில்லை. 

2. தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பிரபலங்களை மட்டுமே தேடிச்சென்று பேசுவார். சாமானிய மக்களைச் சந்திக்க விரும்பமாட்டார். 

3. பணத்தை மட்டுமே வாரியிறைத்து, தவறுகளை சரிசெய்ய முயல்வது.

சக போட்டியாளர்களின் பிளஸ்(+), மைனஸ்(-): 

ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் களமிறங்குகிறார். முதன்முதலாக நேரடி அரசியலில் நுழைந்திருப்பதை தனக்கான பிளஸ்ஸாகப் பார்க்கிறார் கதிர். 

கதிர் ஆனந்துக்குக் காட்பாடி தி.மு.க-வினர் மத்தியில் நல்ல பெயர் இல்லாததும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததும் மிகப் பெரிய மைனஸ். 

அ.ம.மு.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், வேலூரில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அ.தி.மு.க வாக்குவங்கியைப் பிரித்துவிடுவார் என்பது ஏ.சி.எஸ்-ஸின் அச்சம்

ரெய்டு அஸ்திரம்: 

தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி ஆகியவற்றில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனைகளில் மூட்டை, மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த ரெய்டின் பின்னணியில் ஏ.சி.எஸ் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் துரைமுருகன். இதற்குப் பதிலடி கொடுத்த சண்முகமும், `நான் நினைத்திருந்தால் உங்கள் மகனை வேட்பு மனுத்தாக்கல் செய்யவிடாமல் தடுத்திருக்க முடியும். ஐ.டி ரெய்டு ஏவிவிடும் அளவுக்குக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டேன். புறமுதுகில் குத்தும் பழக்கம் என்னிடம் இல்லை. தேர்தலுக்குப் பின் என்னுடைய பலம் புரியும்' எனப் பொங்கினார். 

என்ன நடக்கிறது வேலூரில்? 

வருமான வரித்துறை சோதனையால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ``கடந்த 3 நாள்களாக வாக்கு கேட்பதற்குக்கூட செல்ல முடியாமல் தடுத்துள்ளனர். இப்படித் தடுப்பதால் நாங்கள் மனச்சோர்வு அடைந்துவிடுவோம், எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்ற ஒரே அரசியல் நோக்கத்துக்காக இந்தச் சோதனை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னதால் சென்றுவிட்டார்கள். எப்படியும் கதிர்ஆனந்த் வெற்றிபெறக்கூடாது என்பதற்காகவும் வேலூர் மக்களவைத் தொகுதி, 2 சட்டப்பேரவை இடைத் தேர்தலை (குடியாத்தம், ஆம்பூர்) நடத்தவிடாமல் தடுக்க முயல்கின்றனர். என் வீட்டில் சோதனை நடத்தினால் மற்ற நிர்வாகிகள் பயந்துவிடுவார்கள் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். மக்கள் மனதில் மாற்றம் நிகழும் என்பதை அறியாமல் சோதனை நடத்துகின்றனர்" எனக் கோபத்தில் கொதித்தார் துரைமுருகன். 

கோடை வெப்பம் அனல் வீசிக் கொண்டிருந்தாலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை பணத்தால் குளிர்வித்து வருகிறார் ஏ.சி.எஸ். அவருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக துரைமுருகனும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கினார். ஐ.டி அஸ்திரத்தால் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் தென்படுகிறது. இதை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, பவுடர் பூசிய முகத்தோடு வலம் வருகிறார் ஏ.சி.எஸ்.