Published:Updated:

`சட்ட விரோதமாக வைத்துள்ளனர்!'- அ.தி.மு.க பேனரை கிழித்தெறிந்த அ.ம.மு.க-வினர்

`சட்ட விரோதமாக வைத்துள்ளனர்!'- அ.தி.மு.க பேனரை கிழித்தெறிந்த அ.ம.மு.க-வினர்
`சட்ட விரோதமாக வைத்துள்ளனர்!'- அ.தி.மு.க பேனரை கிழித்தெறிந்த அ.ம.மு.க-வினர்

மதுரையில் பி.கே.மூக்கையா தேவர் 97வது பிறந்தநாள் விழாவின்போது அ.தி.மு.க.பேனர்களை அ.ம.மு.க-வினர் கிழித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

மறைந்த பி.கே.மூக்கையா தேவர் மூன்று முறை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாராக பதவி வகித்து அப்பகுதி மக்களின் ஆதரவைப் பெற்றார். மேலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், இவரது பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டுவருகிறது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலான அ.ம.மு.க-வினர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, தேர்தல் சமயத்தில் சட்ட விரோதமாக ஆளும் கட்சியினர் பேனர் வைத்துள்ளதாக அ.ம.மு.க-வினர் கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் பிரச்னை பெரிதாக, அ.தி.மு.க-வினர் வைத்திருந்த பேனர்களை அ.ம.மு.க-வினர் கிழித்தெரிந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தேர்தல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கின்றனர். தேர்தலுக்குப் பணம் பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய புகார்களை விசாரிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.