Published:Updated:

`தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளர்தான் அவர்!' - அ.தி.மு.க-வினரை நெகிழவைத்த ஜி.கே.வாசன்

`தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளர்தான் அவர்!' - அ.தி.மு.க-வினரை நெகிழவைத்த ஜி.கே.வாசன்
`தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளர்தான் அவர்!' - அ.தி.மு.க-வினரை நெகிழவைத்த ஜி.கே.வாசன்

மதுரை முனிச்சாலை பகுதியில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரத்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார். அப்போது, ``மதுரை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. பி.ஜே.பி-யின் நல்லாட்சி தொடர வேண்டும். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அனைவருடனும் பழகக்கூடிய நபர்கள். அ.தி.மு.க கூட்டணி பெருவாரியாக வெற்றிபெரும். மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்தியனை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் கம்யூனிஸ்ட் வேட்பாளர். அக்கட்சியே முரண்பாடான கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி நான் எந்த ஒரு குறையும் கூற மாட்டேன் என்று ராகுல் காந்தி சொல்லியிருப்பது எந்த ஒரு அரசியல் தலைவரிடமும் எதிர்பார்க்காத ஒன்று. தி.மு.க, சிறுபான்மை என்ற பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறது.

தமிழகத்திலும் அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சியாக தி.மு.க, செயல்படாமல், எதிரிக் கட்சியாகச் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க-வின் வேட்பாளர் ராஜ்சத்யன் என்று நான்  பிரசாரம் செய்ய வரவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக நினைத்துதான் ராஜ்சத்யனுக்கு பிரசாரம் செய்ய வந்துள்ளேன்'' என்று பேசினார்.