Published:Updated:

`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி

`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி
`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், விழுப்புரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வடிவேல் ராவணனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி

அப்போது பேசிய அவர், “நம் வேட்பாளர் வடிவேல் ராவணன் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மட்டுமல்ல, நம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துத் தலைவர்களும் விவசாய குடும்பத்தின் பாரம்பர்யத்தில் இருந்து வந்தவர்கள். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால், தி.மு.க கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இது என்னுடைய சொந்த மாவட்டம். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் சகோதரர்களாக, குடும்பமாக, பாசத்தோடு ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகிறோம். ஆனால், எதிரணியில் இருக்கும் கட்சி எப்படிப்பட்ட கட்சி என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். நம் அமைதிக்காகவும், நம் பெண்களின் பாதுகாப்புக்காகவும் யார் வெற்றிபெற வேண்டும்.

`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி

 யார் வெற்றிபெறக் கூடாது என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாசை ஒருமையில் பேசிவருகிறார். அதேசமயம் பிரதமர் மோடி, இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல்வாதி ராமதாஸ் அவர்கள்தான் என்று குறிப்பிடுகிறார். 40 ஆண்டு காலம் தெருத்தெருவாகச் சுற்றிவந்து சமூக நீதிக்காகவும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைக்காகவும் போராடியவரை தரக்குறைவாகப் பேசுகின்றனர். நம் எதிரணியில் இருக்கும் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலின்போது, நான் விடுதலை சிறுத்தைக் கட்சியே இல்லை என்று ரவிக்குமார் கூறியிருக்கிறார். தேர்தலுக்காக தனது கட்சியை விட்டுக்கொடுத்த அன்றே அவர் தோற்றுப்போய்விட்டார். அவர்களுக்கு கொள்கையாவது கத்தரிக்காயாவது. அரசியலில் இருக்கவே அவர்களுக்குத் தகுதி கிடையாது.

`ராமதாஸை விமர்சிக்க உதயநிதிக்குத் தகுதி இல்லை!' - கொதிக்கும் அன்புமணி

உங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். சரக்கும், மிடுக்கும் இந்தத் தேர்தலோடு காணாமல்போய்விடும். எப்படியென்றால், சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்தான் அமோக வெற்றியைப் பெறப்போகிறார். பானை அங்கு கண்டிப்பாக உடைந்துபோய் விடும். பிரசாரத்துக்கு தருமபுரி தொகுதிக்கு வந்த ஸ்டாலினின் கொடுக்கு, நம்மைப் பார்த்து விமர்சிக்கிறது. 4 படத்தில் நடிகைகளுடன் டான்ஸ் ஆடிவிட்டால் எல்லா தகுதியும் வந்துவிட்டதாக நினைப்பு. அடுத்த தி.மு.க தலைவர் அவர்தான் என்று இப்போது அழைக்கிறார்கள். பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு தி.மு.க-வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் அல்லது பணம் வைத்திருப்பவர்களுக்குத்தான் சீட் கிடைக்கும் என்கிற நிலைமைதான் அங்கு. அதோடு, பெரியப்பா அழகிரி, அத்தை கனிமொழி, மாமா தயாநிதிமாறன் என ஒட்டுமொத்த குடும்பத்துக்கு மட்டும்தான் சீட் கொடுக்கிறார்கள். 4 சின்னப் பசங்கதான் தி.மு.க என்ற இயக்கத்தை இப்போது நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உதயநிதி போன்றவர்கள் எல்லாம் ராமதாஸை விமர்சிக்க அருகதை இல்லை'' என்றார்.

பின் செல்ல