Published:Updated:

`கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல!'- அன்புமணியைச் சாடும் உதயநிதி

`கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல!'- அன்புமணியைச் சாடும் உதயநிதி
`கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல!'- அன்புமணியைச் சாடும் உதயநிதி

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து திருவாரூர் வாளவாய்காலில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் ``முதியோர் பென்சன் திட்டம், நூறு நாள் வேலை திட்டம் கலைஞர் கொண்டுவந்த திட்டம். இப்போது அதை படிப்படியாக நாற்பது நாள்களாக கொண்டு வந்துவிட்டனர். தற்போது அந்த வேலையும் இல்லை. இதை அனைத்தையும் மறந்துவிடாதீர்கள். இந்த எழுச்சி ஏப்ரல் 18 வரைக்கும் இருக்க வேண்டும். உங்களுடைய வாக்கு உங்களைச் சுற்றி உள்ளவர்களுடைய வாக்கு, உங்கள் குடும்ப சொந்தக்காரர் என எல்லாருடைய ஒவ்வொரு வாக்கும் முக்கியம்'' என்றார்.

`கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல!'- அன்புமணியைச் சாடும் உதயநிதி

இதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ``ராகுல்காந்தியை ஹீரோ எனவும் மோடியை வில்லன் எனவும் ஒரு வில்லன் இருந்தால் அவர் கால்களுக்கு கீழே இரண்டு கைக்கூலிகள் இருப்பார்களே அவர்கள்தான் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்'' என மூவரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பின்னர் பேசிய அவர், ``அன்புமணி ராமதாஸ் என்னை ஸ்டாலின் கொடுக்கு என்று சொல்கிறார். ஆமாம், நான் ஸ்டாலின் கொடுக்குதான். கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல. அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரைப் பார்த்து போடா டயர் நக்கி எனவும் முதலமைச்சரை பார்த்து ஒன்னும் தெரியாத மண்ணு என்று கூறிவிட்டு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஏப்ரல் 18 மோடிக்கு கெட்அவுட்டு சொல்லணும். மோடி ஐந்து வருடமாக ஒரு ஆணியும் புடுங்கல. மோடி வெளிநாட்டுக்குச் சென்ற செலவு மட்டும் ரூ.5,000 கோடி. ஆனால், கஜா புயல் நிவாரணம் சரியா கூட கொடுக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ``பணமதிப்பிழப்பு மூலம் புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்றார்; பிறந்துவிட்டதா. இதுவரை எதுவும் நடக்கவில்லை. நீட் தேர்வு வைத்து அனிதாவைக் கொலை செய்தவர் மோடி. அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி தேர்தல் வந்தவுடன் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுகிறார் அவருக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். என் தாத்தா டிவி கொடுத்தார் என் அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார். 

`கொடுக்கு கொட்டக் கொட்ட வலிக்கும்ல!'- அன்புமணியைச் சாடும் உதயநிதி


மோடி போட்ட பிச்சைதான் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவி. இந்த ஆட்சி ஈவு இரக்கமற்ற ஆட்சி. கருணாநிதிதான் திருவாரூர் வேட்பாளர் என நினைத்து பூண்டி கலைவாணனுக்கு வாக்களிக்க வேண்டும். மிகப்பெரிய வெற்றியை நீங்கள் பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றோம். நீங்கள் வாக்களித்தீர்களா என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். இந்த முறை வாக்களியுங்கள் நிச்சயமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளித்தார்.


எனது தாத்தா ஆசைப்பட்டது ஒன்றே ஒன்றுதான். மெரினாவில் இடம் வேண்டும் என்பது அவருடைய ஆசை. அண்ணாவின் அருகிலேயே தானும் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவருக்கு ஆசை. ஆனால், அ.தி.மு.க அரசு மெரினாவில் இடம் இல்லை என அறிவிப்பை வெளியிட்டது. அதை நீதிமன்றம் சென்று போராடிப் பெற்றோம். ஈவு இரக்கமற்ற ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மோடியையும், அவரது அடிமைகளான ஓ‌.பி.எஸ் மற்றும் ஈ.பி‌.எஸ் ஆட்சியை விரட்ட தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இந்தியாவிலேயே கணினி மயமாக்கப்பட்ட முதல் மாவட்டம் திருவாரூர் மாவட்டம்தான். அனைவரும் அதை மனதில் வைத்துகொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்'' என பிரசாரம் செய்தார்.

பின் செல்ல