Published:Updated:

`தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்

`தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
`தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.  

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனுக்களைத் திரும்பப் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தொகுதிகளுக்கான முடிவுகள் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளோடு இந்தத் தொகுதிகளுக்குமான முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.