Published:Updated:

`எங்கள் தேர்தல் அறிக்கையைக் கிண்டல் செய்தது இந்தக் கட்சிதான்!' - பா.ஜ.க ஐ.டி விங்

``தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் ஐந்து தொகுதியிலும், வார் ரூம் அமைத்து தொகுதிக்கு இருபதுபேர் என வேலை செய்துகொண்டிருக்கிறோம். இவர்களைப் பழிக்குப் பழி வாங்கவும் இது நேரமில்லை. எங்களுடைய பதிலடி நாங்கள் பெறுகிற வெற்றியாக இருக்கும்."

`எங்கள் தேர்தல் அறிக்கையைக் கிண்டல் செய்தது இந்தக் கட்சிதான்!' - பா.ஜ.க ஐ.டி விங்
`எங்கள் தேர்தல் அறிக்கையைக் கிண்டல் செய்தது இந்தக் கட்சிதான்!' - பா.ஜ.க ஐ.டி விங்

நடைபெற இருக்கின்ற தேர்தலையொட்டி முக்கியமான கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட சூழலில் தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் நேற்றுதான் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.  ஆனால், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே அவர்கள் கட்சியின் பெயரில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன. இது இணையத்தில் நேற்றிலிருந்து இப்போது வரை அதிகம் பகிரப்படுகிறது.

`எங்கள் தேர்தல் அறிக்கையைக் கிண்டல் செய்தது இந்தக் கட்சிதான்!' - பா.ஜ.க ஐ.டி விங்

இது யார் செய்திருக்கக்கூடும் எனப் பலருக்குக் கேள்வி எழுந்துள்ள நிலையில், பா.ஜ.க ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசினேன். ``தி.மு.க-வினர்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என உறுதியாக நம்புகிறோம். அவர்கள்தான் இதை இணையத்தில் முதலில் பகிர்ந்தார்கள். அதைப் பகிர்ந்த சில ஐ.டிக்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்தல் ஆணையைத்திடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறோம். அடுத்து சைபர் க்ரைமில் கம்ப்ளைன்ட் கொடுக்க இருக்கிறோம். 

`எங்கள் தேர்தல் அறிக்கையைக் கிண்டல் செய்தது இந்தக் கட்சிதான்!' - பா.ஜ.க ஐ.டி விங்

இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கவும், மற்றவர்களை எதிர்க்கவும் இணையப் பிரசாரத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் அவர்கள் செலவு செய்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதிதான் இது என கணிக்கிறேன். அவதூறும், கேலி கிண்டல் செய்தும் பிரசாரம் செய்து எங்களுக்குப் பழக்கமில்லை. தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் 5 தொகுதிகளிலும், வார் ரூம் அமைத்து தொகுதிக்கு 20 பேர் என வேலை செய்துகொண்டிருக்கிறோம். இவர்களைப் பழிக்குப் பழி வாங்கவும் இது நேரமில்லை. எங்களுடைய பதிலடி என்பது, நாங்கள் பெறுகிற வெற்றியாக இருக்கும்'' என்றார்.