Published:Updated:

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?
சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

"`உதயசூரியனா... இலையா?' என்ற மோதலில் யாருக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப் போகிறது பெரம்பலூர்?" என ஆவலோடு காத்திருக்கிறார்கள் தொகுதிவாசிகள்.

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

தொகுதி: பெரம்பலூர்

பெரம்பலூர் (தனி), முசிறி, துறையூர் (தனி), லால்குடி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது,

ரஞ்சன்குடி கோட்டை! 

செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோயில், ரஞ்சன்குடிகோட்டை, விசுவக்குடி நீர்த்தேக்கம், சாத்தனூர் கல்மர பூங்கா, மதுர காளியம்மன் திருக்கோயில் எனச் சுற்றுலாத் தலங்கள் நிரம்பிய தொகுதி. ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அழகிய கோட்டையாகும்.

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

தூங்கானை மறவனின் துயரம்! 

ரஞ்சன்குடி கோட்டையைப் பிற்கால பாண்டிய மன்னின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன் என்ற மன்னன் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோட்டை கட்டப்பட்டதற்குச் சான்றாக மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையைச் சுற்றிப் பாதுகாப்புக்காக அகழி, மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுமார் 57.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பது சிறப்பு. தூங்கானை மறவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டதால், கோட்டை எழுப்பும் பணிகள் நிறைவடையவில்லை. கோட்டையைக் கட்டி முடிக்காமலேயே தூங்கானை மறவன் இறந்துவிட்டார். அவருடைய சமாதியும் கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. பல போர்களைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது ரஞ்சன்குடி கோட்டை. 

7 முறை தி.மு.க, 6 முறை அ.தி.மு.க! 

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர் (தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. 2008 மறுசீரமைப்புக்குப் பின்னரே பெரம்பலூர் தொகுதியிலிருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதிக்குள் இணைக்கப்பட்டன. திருச்சி மக்களவைத் தொகுதியிலிருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதிக்குள் சேர்க்கப்பட்டன. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை, பெரம்பலூர் தொகுதியோடு இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபைத் தொகுதியானது புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதிக்குள் சேர்க்கப்பட்டது. துறையூர் (தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதிக்குள் வந்தது. 7 முறை தி.மு.க-வும் 6 முறை அ.தி.மு.க-வும் 3 முறை இதரக் கட்சிகளும் வென்றுள்ளன. முத்தரையர், உடையார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக களமிறக்கப்படுவது வழக்கம். 

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

என்னாச்சு 750 ஏக்கர்? 

1. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 750 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது அரசு. ஆனால், இன்று வரையிலும் திட்டமும் வரவில்லை விவசாயிகளுக்கு நிலங்களும் கிடைக்கவில்லை. 

2. அரசு மருத்துவக்கல்லூரி கனவும் நிறைவேறவில்லை. 

அரியலூர் டு நாமக்கல்! 

பெரம்பலூர் மாவட்டத்தின் தலையாய பிரச்னை தண்ணீர்த் தேவை. குடிநீர்த் தேவைக்கு மட்டுமல்லாமல், விவசாயத்துக்கும் கொள்ளிடம் தண்ணீரைத்தான் பெரம்பலூர் மக்கள் நம்பியிருக்கிறார்கள். ரயில் பாதையே இல்லாத மாவட்டமாகப் பெரம்பலூர் இருக்கிறது. ஆ.ராசா எம்.பி-யாக இருந்தபோது, ரயில்வே வழித்தடம் அமைப்பதற்காக சர்வே பணிகளுக்கு 10 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தார். அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. அதன் பிறகு எம்.பி-யாக இருந்த மருதராஜாவிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது அரியலூரிலிருந்து துறையூர் வழியாக நாமக்கல் வரையில் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்ய ரூ.16.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான குழுவை அமைத்ததோடு சரி. இன்றளவும் கிடப்பில் கிடக்கிறது.

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், திறக்கப்படவில்லை.முசிறி - துறையூர் சாலையில் அதிகமாகக் கனரக வாகனங்கள் செல்வதால் அந்தச் சாலையே குண்டும் குழியுமாக உள்ளது. வளர்ந்துவரும் நகரமான குளித்தலையின் பேருந்து நிலையம் இன்றுவரை கோயில் நிலத்தில் இயங்கி வருகிறது. இத் மாற்றித்தர வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் வைத்தும், எந்தப் பயனும் இல்லை. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரிவேந்தரின் கை ஓங்கியிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு உட்கட்சி மோதலை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இவரது சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த 5 ஒன்றியச் செயலாளர்கள், சிவபதிக்கு எதிராகக் கடுமையாக வேலை செய்து வருகின்றனர். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை அ.ம.மு.க வேட்பாளரான தொட்டியம் ராஜசேகர் கணிசமாகப் பிரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. முத்தரையர் சமுகத்தின் வாக்குகளும் பிரிவது அ.தி.மு.க-வுக்கான மைனஸ். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. பணப்பட்டுவாடா.
2. தலைவர்களின் பிரசாரம்.
3. வாக்குறுதிகள்.
4. வேட்பாளரின் சொந்த செல்வாக்கு.
5. கட்சி விசுவாசம். 

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

"நான் வெற்றி பெற்று வந்தால் அனைத்துக்கும் அரசுப் பணத்தையே நம்பியிருக்க மாட்டேன். எனது சொந்த பணத்தைச் செலவு செய்வேன்" என்பதைத் தவறாமல் பிரசாரத்தில் முன்வைக்கிறார் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர். அத்துடன், "எனது கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் படிப்பு, மருத்துவமனைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசம், நடுத்தர வர்க்கத்தினருக்கு முக்கால்வாசி பணம் குறைப்பு" என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் சிவபதிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். `அரியலூர் - பெரம்பலூர் இடையே ரயில் பாதை அமைக்கப்படும்' என்பதை பிரதான வாக்குறுதியாக முன்வைக்கிறார் சிவபதி. தொகுதிக்குக் கொண்டு வர உள்ள திட்டங்களைப் பட்டியலிடுகிறார் தொட்டியம் ராஜசேகர். 

சிவபதியின் கடுப்பு; அந்த 5 ஒ.செ-க்கள்; வேந்தரின் கரன்ஸி! - பெரம்பலூர் கள நிலவரம் என்ன?

மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டி மோதல், சிறுபான்மையினர் வாக்குகள் என சிவபதிக்கு சில மைனஸ்கள் இருந்தாலும், "`உதயசூரியனா, இலையா' என்ற மோதலில் யாருக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்போகிறது பெரம்பலூர்?" என ஆவலோடு காத்திருக்கிறார்கள் தொகுதிவாசிகள்.

அடுத்த கட்டுரைக்கு