Published:Updated:

முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! 

முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! 
முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! 

நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்தை அழுத்தினால், அது வேலை செய்யவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது. 

முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! 

நாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, அருணாசலப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெறும் தேர்தலில், பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்தை அழுத்தினால், அது வேலை செய்யவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது. 

ஜம்மு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் இந்த நிலைமை காணப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் தளத்தில், " உள்ளூர் செய்தித் தளம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபுர் வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரி ஒருவர், 'மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பட்டன் வேலை செய்யவில்லை என்பதால், வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளோம்' எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது. 

வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த முறைகேடுகுறித்து தேர்தல் துணை ஆணையருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது" என ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். 

முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! 

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தக் கட்சிக்குரிய பட்டன் வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல், நான்காவதாக இடம்பெற்றுள்ள சின்னத்தின் ( காங்கிரஸ்) பட்டன் வேலை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அந்த வாக்குச் சாவடி அதிகாரி, இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார். 

இதனிடையே,  பல வாக்குச் சாவடிகளிலும் இதே நிலைமைதான் காணப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பூஞ்ச் மற்றும் சூரன்கோட் மாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழுத்தினால், அதற்கான பட்டன் வேலைசெய்யவில்லை என்பதால், தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில், பிரச்னை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் காங்கிரஸ் பட்டன் மட்டும் அல்லாது, சில இடங்களில் பி.ஜே.பி சின்னத்துக்குரிய பட்டனும் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார். 

இன்றைய முதல்கட்ட தேர்தலில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின்  பாராமுல்லா மற்றும் ஜம்மு  ஆகிய  2 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு தொகுதியை, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஜுகல் கிஷோர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.