Published:Updated:

`அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷா ஆட்டோ வேகமாக ஓடும்' - ஞானதேசிகன் நம்பிக்கை!

`அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷா ஆட்டோ வேகமாக ஓடும்' - ஞானதேசிகன் நம்பிக்கை!
`அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷா ஆட்டோ வேகமாக ஓடும்' - ஞானதேசிகன் நம்பிக்கை!

அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷாவின் ஆட்டோ வேகமாக ஓடும் ஞானதேசிகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆட்டோ சின்னம் நிச்சயம் வெற்றி பெறும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் எனத் தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணை தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா எனப் பேசி தேர்தலின் போக்கை மாற்ற முயற்சி செய்கிறார். மோடி தலைமையிலான அணி என்பது திறமையான ஒரு நிலையான ஆட்சி தரக்கூடிய அணி. 

இந்த அணி சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகப் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஸ்டாலின் தனிநபர் விமர்சனங்களில் அதிகமாக ஈடுபடுகிறார். மோடி, முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு விமர்சனம் செய்து பேசுகிறார். கனவு காண்பதில் ஸ்டாலின் வல்லவர். அதனால்தான் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜூன் 3-ம் தேதி நாங்கள் ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகிறார். ஜூன் 3-ம் தேதியும் இந்த ஆட்சி மாறப்போவதில்லை. 2021-ம் ஆண்டுதான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். இந்தக் கூட்டணிதான் வெல்லும். எங்களுடைய கூட்டணியை முரண்பட்ட கூட்டணி எனத் தி.மு.க-வினர் கூறி வருகின்றனர். 

ஆனால், அவர்களுடைய கூட்டணிதான் தற்போது முரண்பட்ட கூட்டணியாக உள்ளது. அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷாவின் ஆட்டோ வேகமாக ஓடும். ஆட்டோ சின்னம் கண்டிப்பாக வெற்றி பெறும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அந்தக் கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறது. ஆனால், நாங்கள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு தான் கையெழுத்திட்டு இருக்கிறோம். இதனால் எங்கள் லட்சியங்களும் கொள்கைகளும் மாறப்போவது இல்லை" என்றார்.