Published:Updated:

`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு

`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு
`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு
`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் மோடி. இதற்காக, தேனி கானாவிலக்கு பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 
பிரசார கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``தி.மு.க தலைவர் ஸ்டாலினைத் தவிர அவர்களின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் யாரும் ராகுல்காந்தியை பிரதமர் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. ஒற்றுமை இல்லை. கேரளாவில் காங்கிரஸை ஆதரிக்கிறீர்களா. கம்யூனிஸ்ட்டை ஆதரிக்கிறீர்களா. சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.  மீண்டும் மத்தியில் மோடிதான், பிரதமராக வருவார். உலக நாடுகளில், இந்திய நாட்டுக்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். எனவே, மீண்டும் மோடி, பிரதமராக நாம் பாடுபட வேண்டும்.

`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டுவேன் என்றும், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைப்பேன் என்று கர்நாடகத்தில் பேசியுள்ளார் ராகுல்காந்தி. இவரைத் தான் பிரதமர் என்கிறார் ஸ்டாலின். காவிரியில் மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அவர்கள் கட்சியின் வேட்பாளர் தேனியில் தேர்தலில் நிற்கிறார். அவரைத் தோற்கடிக்க வேண்டும். கோதாவரி காவிரி நதிநீர் இணைப்புத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்'' என்று பேசினார். 

மேடையில் பேசிய மோடி, ``நாளை தொடங்க இருக்கிற தமிழ்ப் புத்தாண்டுக்கு என் வாழ்த்துகள். நாளை அம்பேத்கரின் பிறந்த தினம். அவருக்கு எனது மரியாதைகள். இந்த மைதானத்தில் வெப்பமும் உற்சாகமும் அதிகமாக உள்ளன. மைதானத்திலும் சாலையிலும் ஏராளமானோர் திரண்டிருப்பதை ஹெலிகாப்டர் மூலம் பார்த்தேன். அனைவருக்கும் என் நன்றிகள். இந்த மண் கலை, இசை மட்டுமல்லாமல் துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள். அவர்களின் நலத்திட்டங்களால் ஏழைகள் வறுமையில் இருந்து வெளிவந்தனர்.  

`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு

புதிய இந்தியா பற்றிய கனவுகளை நோக்கிச் செல்கிறோம். இந்தியா வரலாற்றில் முக்கியமாகத் தடம் பதித்துக்கொண்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் என்மீது குறை சொல்கிறார்கள். தமிழகத்தின் எதிரிகள் எல்லாம், வளர்ச்சிக்கு எதிராக ஒன்று கூடியிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடிக்கிறார்கள். அதை அவர்களுக்கு செலவு செய்கிறார். துக்ளக் சாலையில் வசிக்கும் காங்கிரஸ் தலைவர் அதில் இருக்கிறார். ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

தேனி மக்கள் தைரியமானவர்கள். நீங்கள் முடிவு செய்யுங்கள். எப்படி இவர்களைக் கையாளப்போகிறோம் என்று. நமது நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது, நாம் எப்போதும் சமரசரம் செய்துகொள்வதில்லை. காங்கிரஸும் நேர்மையின்மையும் நெருங்கிய நண்பர்கள். தலித் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் நீதி வழங்குமா. எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கலைத்தவர்கள் இந்தக் காங்கிரஸார். பல ஆண்டுகளாக இப்பகுதியில் ரயில் இணைப்புக்காகப் போராடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, அதுபோன்ற பல பணிகள் விரைவுபடுத்தப்படும். மதுரை - செட்டிகுளம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

`கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்!' - தேனியில் மோடி பேச்சு

எய்ம்ஸ் மருத்துவமனை மூலமாக இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், தங்களது விளைபொருள்களின் ஆதார விலையை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கோரிக்கை வைத்தார். அதைத் தற்போது அதிகரித்திருக்கிறோம். கங்கையைப்போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம். சுந்தரமகாலிங்க மலை மற்றும் ஐயப்பன் கோயிலுக்கு எளிமையாக, விரைவாகச் செல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முனைப்போடு இருக்கிறது இந்த அரசு. தோல்வி மனப்பான்மையில் எதிரணியினர் உள்ளனர்'' என்று பேசினார்.

இந்தப் பிரசார கூட்டத்தில் தேனி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், திண்டுக்கல் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்து கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விருதுநகர் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெரியகுளம் அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேல். ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், சாத்தூர் அ.தி.மு.க வேட்பாளர் ராஜுவர்மன், நிலக்கோட்டை அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் பிரேமலதா விஜயகாந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.