Published:Updated:

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி
`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

"பி.ஜே.பியில் உள்ளவர்கள் அறிவியல் தெரியாதவர்கள். உ.பியில் உள்ள படிக்காத மக்களிடம்தான் அவர்களின் கட்டுக்கதைகள் எல்லாம் எடுபடும். இங்கே எடுபடாது. முட்டாள்கள் மட்டுமே பா.ஜ.கவில் உறுப்பினர்களாக இருக்க முடியும்" என்று கோவையில் திருமுருகன் காந்தி பேசியுள்ளார்.

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

`தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம்' என்ற  முழக்கத்தை முன்னிறுத்திய பொதுக்கூட்டத்தை மே17 இயக்கம் நேற்று கோவையில் நடத்தி முடித்துள்ளது. அதில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ``இரண்டு ஆண்டுகளாக கோயம்புத்தூரில் கூட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நீதிமன்றம் மூலம் அனுமதிபெற்று, இப்போது கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்று நம்மால் நம்ப முடியுமா?. வெள்ளைக்காரன் காலத்தில்கூட கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கிடையாது. இந்த ஊர் நான் படித்து வளர்ந்த ஊர். அரசியல் பேசி அலைந்த ஊர். இந்த ஊரில் கூட்டம் நடத்த முடியவில்லை என்றால் தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சி என்ன என்பதை குழந்தைகள்  கூட புரிந்துகொள்ள முடியும்.

அப்போது  கோவையின் சுவர்களில் தந்தை பெரியாரின் கருத்துக்களை எழுதி வைத்திருப்பார்கள். அதைப் படித்துதான் எங்களை நாங்கள் அரசியல்படுத்திக் கொண்டோம். இன்று அந்த சுவர்களில் தாமரை இருப்பது நமது அரசியலுக்கு  அவமானம் என்று கருதுகிறேன். சுவர்களிலிருந்து மட்டும் அல்ல மனதிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தாமரை அகற்றப்பட வேண்டும். கோவை நகரம் மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் மோசமான வன்முறைகளில் கோவையின் பங்கும் இருக்கிறதென்றால் இந்த நகரம் எதை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது? . மதவெறி மட்டுமல்ல, தனியார் மயத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் இந்த நகரம் சீரழிந்துபோகும். சீரழிந்துகொண்டிருக்கிறது.

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

ராமர் கோவில் விவகாரம் இந்துத்துவா அமைப்புகளின்  கற்பனைகளில் உருவாக்கப்பட்ட  சினிமா. பா.ஜ.கவினர் எப்போதாவது வளர்ச்சியைப் பற்றி, அறிவியலைப் பற்றி பேசியிருக்கிறார்களா?. இல்லவே இல்லை. அவர்கள் எப்போதும் கோயிலைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஏனென்றால் அங்குதான் உண்டியல் இருக்கிறது. வளர்ச்சி வரும் என்று நம்பி மோடிக்கு வாக்களித்தவர்களுக்கு நாமம்தான் போட்டுள்ளார்கள். மோடி அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தின் பின்னாலும் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் யார் என்பது தெளிவாகப் புரியும்.

கோவையின் குடிநீர் விநியோக உரிமையை பிரான்ஸ் நிறுவனமான சூயஸுக்கு  நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்கள். அந்த நிறுவனம் இங்கே வந்து  சிறுவாணியில் புதிதாக  டேம் கட்டப்போவதில்லை. அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர குழாய்கள் பதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர் அமைத்து கட்டணம் வசூலிக்கப் போகிறது. நாம் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கும், பயன்படுத்திய கழிவுநீரை வெளியேற்றுவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகளை நமக்கு பக்கத்தில் உள்ள கர்நாடகா மக்களிடம் கேட்டுப் பாருங்கள் தெரியும். அவர்கள் இதேபோன்ற திட்டத்தால் பாதிக்கப்பட்டு அல்லாடி வருகிறார்கள். அங்கே தண்ணீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டதால்தான் நமக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள்.

`பி.ஜே.பியில் இருப்பவர்கள் அறிவியல் தெரியாதவர்கள்!' - திருமுருகன் காந்தி

அடுத்ததாக  ஸ்மார்ட் சிட்டி திட்டம். அது என்ன ஸ்மார்ட் சிட்டி?. இதோ... அருகிலிருக்கிற காந்திபுரம் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, தனியார் நிறுவனங்கள் மூலம் பேருந்து நிலையத்தைச் சுற்றி பெரிய  காம்ப்ளக்ஸ் கட்டி, அதை கார்ப்பரேட்கள் வசம் ஒப்படைத்துவிடுவார்கள். இப்போது அங்கே பூ விற்பவர்கள், பட்டாணி விற்பவர்களெல்லாம் அடித்து விரட்டப்படுவார்கள். இப்படியாக தனியார் கம்பெனிகளுக்கு நகரத்தை விற்பதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கம்.

கோவை தொழிற்சாலைகள் மிகுந்த நகரம். பா.ஜ.க கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியினால் சுமார் ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதை ஏன் இங்குள்ள முதலாளிகள் கேள்வி எழுப்பமாட்டேன் என்கிறீர்கள்?. மேக்-இன் இந்தியா என்றார்கள் அதில் என்ன தயாரித்தார்கள்?. ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா?. ரஃபேல் விமானம் தயாரிப்பதற்கான வாய்ப்பை அரசு நிறுவனத்திற்கு வழங்காமல், பேப்பரில்கூட விமானம் செய்து பார்த்திடாத  அம்பானிக்கு வழங்கியிருக்கிறது பா.ஜ.க அரசு. அதை ஏன் இங்குள்ள முதலாளிகள் கேள்வி எழுப்ப மாட்டேன் என்கிறீர்கள். ஏன் பிரான்ஸ் நிறுவனத்தின் டெக்னாலஜிகளை மட்டும் வாங்கிக்கொண்டு உங்களால் அந்த விமானத்தை உருவாக்க முடியாதா. 

பி.ஜே.பியில் உள்ளவர்கள் அறிவியல் தெரியாதவர்கள். உ.பியில் உள்ள படிக்காத மக்களிடம்தான் அவர்களின் கட்டுக்கதைகள் எல்லாம் எடுபடும். இங்கே எடுபடாது. அங்கே மாட்டு கோமியத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது, இங்கே கரூரில் நம் பள்ளி மாணவர்கள் ராக்கெட் செய்துவிடுகிறார்கள். ஆகையால் உங்கள் கதைகளை உ.பியில் போய் வைத்துக்கொள்ளுங்கள்.  முட்டாள்கள் மட்டுமே பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இருக்க முடியும்.

கோவை இந்துத்துவா அமைப்புகளின் கையில் இருப்பது அவமானம். பணத்தின் மூலமும் அடிமை அ.தி.மு.க மூலமும் ப.ஜ.க வெற்றிபெற முயற்சிக்கிறது. ஊழல்வாதியான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பா.ஜ.கவை வெற்றிபெற வைக்க முயற்சிக்கிறார். கோவை காவல்துறை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் படையாகச் செயல்படுகிறது. பா.ஜ.க வென்றால் நாடு நாசமாகும், கோவை குட்டிச்சுவராகும். ஒருபோதும் தமிழ் மண்ணில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. அரசியலை மக்கள் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் பொறுக்கிகள் கையில் எடுப்பார்கள். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.கவை வீழ்த்த சூளுரை ஏற்போம்'' என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு