Published:Updated:

பிரசாரம் ஓய்ந்தது; தேர்தல் ஜுரம் தணியவில்லை... தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளின் 'பரபர' களநிலவரம்!

பிரசாரம் ஓய்ந்தது; தேர்தல் ஜுரம் தணியவில்லை... தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளின் 'பரபர' களநிலவரம்!
பிரசாரம் ஓய்ந்தது; தேர்தல் ஜுரம் தணியவில்லை... தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளின் 'பரபர' களநிலவரம்!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தேர்தல் ஜுரம் அனல் அடித்தது. இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம் என்ன என்பதை இங்கே சிறப்புக் கட்டுரைகளாகத் தொகுத்து இருக்கிறோம். உங்கள் நாடாளுமன்ற தொகுதியின் நிலவரத்தை அறிய கீழே க்ளிக் செய்யவும்.

சோழர்கள் ஆண்ட மண்ணில் சோறு இல்லையே! - திருவள்ளூரின் ஸ்டேட்டஸ் நிலவரம்...

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி வேணுகோபால்... இந்தப் போராட்டத்தில் வெல்லப்போவது இலையா, கையா?... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

`இறக்குமதி' மோகன்; `கோலிக்குண்டு' காளியம்மாள்; பிளட் டெஸ்ட்!  - வடசென்னையைக் கைப்பற்றப் போவது யார்?

‘எங்க ஊரு மெட்ராஸ்... அதுக்கு நாங்கதானே அட்ரஸ்’... சென்னையின் அடையாளமே வடசென்னைதான். வட சென்னை தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க... 

`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

`தென்சென்னை வாழ்கிறது; வடசென்னை தேய்கிறது' என்ற முழக்கத்தை பூர்வகுடிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அந்தளவுக்கு தென்சென்னையை குறிவைத்தே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க... 
 

தி.மு.க கமாண்டர்கள்; ஜெ, கருணாநிதி சமாதி; உட்கட்சி குஸ்தி! - மத்திய சென்னை தொகுதி நிலவரம்

மத்திய சென்னை தொகுதியின் எல்லையில்தான் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அந்த இருவர் மீதும் விசுவாசத்தை வைத்துள்ள தொண்டர்கள் தொகுதி முழுவதும் நிறைந்துள்ளனர்.   வாக்குப்பதிவை தீர்மானிக்கும் டாப் 5 காரணிகள் எவை? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க... 

`டென்ஷன்' டி.ஆர்.பாலு; `கலங்கும்' வைத்தி; `நம்பிக்கை' நாராயணன்! - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி களநிலவரம்

அறிமுகம் இல்லாத வேட்பாளரும் அ.தி.மு.க மீதான அதிருப்தி அலையும் தன்னைக் கரையேற்றும் என எதிர்பார்க்கிறார் டி.ஆர்.பாலு. ஸ்ரீபெரும்புதூரின் ஸ்டேட்டஸ் நிலவரம் இதோ...  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க... 

தி.மு.க 3.5 லட்சம், ம.தி.மு.க 2 லட்சம், அ.தி.மு.க? - காஞ்சிபுரம் தொகுதி வெற்றி நிலவரம்... 

திராவிடக் கட்சிகள், அண்ணா பெயரை முன்னிறுத்தியே பிரசாரம் செய்வது வழக்கம். திராவிடக் கட்சிகளின் சென்டிமென்ட் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`சிங்கிள் டீ' மூர்த்தி, `காஸ்ட்லி' ரட்சகன், `பரிசுப்பெட்டி' பதற்றம்!  - அரக்கோணத்தில் மாம்பழம் பழுக்குமா? 

வடமாவட்டங்களில் சாதி வாக்குவங்கியை மையப்படுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் முக்கியத் தொகுதிகளில் ஒன்று... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

இருபெரும் தலைகள் மோதுவதால் பணப்பட்டுவாடா முக்கிய காரணியாக இருக்கிறது. வேலூரில் யார் கௌரவம் காப்பாற்றப்படும் என்ற மோதலில் துரைமுருகனும் ஏ.சி.சண்முகமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

கே.பி.முனுசாமி Vs செல்லக்குமார்..! - கிருஷ்ணகிரியில் யார் யானை... யார் எறும்பு?

கிருஷ்ணகிரியில் கூட்டணிக் கட்சிகளின் பலம் பிளஸ் வன்னியர் சமூக வாக்குகள் ஆகியவற்றை அ.தி.மு.க அதிகம் நம்பியுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகம் நம்பியுள்ளது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி. முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்தால், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தும் அறுவடை செய்வதற்குத்தான் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை. தி.மு.க.வுக்குள் நடைபெறும் உள்ளடி வேலையால் சூரியனை ஓரம்கட்டி மாம்பழ வாசம் வீசுமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

திருப்பம் `தி.மு.க'; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட்! - திருவண்ணாமலையில் இலையா... சூரியனா? 

தி.மு.க-வை சேர்ந்த வேட்பாளர் அண்ணாதுரையோ, முத்துகுமாரசாமி தற்கொலையை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். `அரசியல் வாழ்க்கைக்கு வாழ்வா சாவா..?' என தீர்மானிக்கும் தேர்தலாக இருப்பதால், தொகுதி மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அக்ரி. முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?

ஆரணியில் சேவல் கூவுமா... கை ஓங்குமா? பரபர தொகுதி நிலவரம்... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மொகலாயர்களும் அடிக்கடி மோதிக்கொள்ளும் இடம் இது. ஒருவேளை பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வெற்றி பெற்றிருந்தால் விழுப்புரம் புதுச்சேரியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

பொன்முடி யுத்தம்; `1.50 லட்சம்' தே.மு.தி.க; `அதிர்ச்சி' அ.ம.மு.க!  - சுதீஷ் Vs கௌதம சிகாமணி

சுதீஷ், கௌதம சிகாமணி இருவருக்கும் தொகுதியில் இருக்கும் அத்தனை பலத்தையும் தாண்டி சிக்கலை ஏற்படுத்துவது அவரவர் கட்சிகளின் உட்கட்சிப்பூசல் தான். இந்தச் சவாலை அவர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள்? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

கருணாநிதியின் மூன்றாவது கோட்டையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா?  சேலம் தொகுதி நிலவரம்

''சேலத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் தமிழகத்திலேயே அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு'' என்றார். அவர் இலக்கு நிறைவேறுமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

முட்டைக்கு ஃப்ரிட்ஜ் கொடுப்பவர் யார்..! அ.தி.மு.க.வா... கொ.ம.தே.க.வா? - நாமக்கல் நிலவரம்

அ.தி.மு.க.வின் உட்கட்சி சலசலப்புகள் இருந்தாலும் காளியப்பனுக்காக பம்பரமாகச் சுற்றி வேலை செய்து வருகிறார் அமைச்சர் தங்கமணி. இருப்பினும், இலை மலருமா அல்லது கொ.ம.தே.க. கொடியேற்றுமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

மஞ்சள் மற்றும் ஜவுளித்தொழிலுக்கு பெயர் பெற்றது ஈரோடு. இங்கு கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு, உலகின் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..
 

பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ் மட்டம் வீக்! - திருப்பூரில் `தோழி' vs `தோழர்' பஞ்சாயத்து

அ.தி.மு.க வாக்குவங்கியைக் குறிவைத்துக் களமிறங்கினாலும், மத்திய அரசின் செயல்பாடுகளால் தொழில்துறையினர் பெரும் கொதிப்பில் உள்ளனர். இந்தக் கோபம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான சுப்பராயனை வெற்றி பெற வைக்குமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

கடவுளின் எருமை, 100 கிளாஸ் டீ, கைக்காசு கெடுபிடி! நீலகிரியின் நிஜ நிலவரம்

ராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. தேர்தல் ஆணையம், அ.தி.மு.க, உள்கட்சி பூசல், பணம் என அனைத்தையும் பக்குவமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. அத்தனை சவால்களையும் தி.மு.க. கடந்து வெற்றி பெறுமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`எம்.ஜி.ஆர் பிளான், ஜெயலலிதா ராசி, கருணாநிதி அச்சம்!' - கோவையின் கள நிலவரம் என்ன?

'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் டாப் 5 காரணிகள் என்னென்ன? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

பாலியல் பிரளயம், தேயிலை-தென்னை விவகாரம்..!  அ.தி.மு.கவுக்கு இரட்டை செக்! பொள்ளாச்சி கள நிலவரம்

இரு கட்சிகளிலும் உட்கட்சி புகைச்சல் இருந்தாலும் பாலியல் வழக்கு விவகாரத்தின் மூலமாக, எந்தளவுக்கு வாக்குகளாக அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதுதான் தி.மு.க முன்நிற்கும் சவால். பொள்ளாச்சி தங்களின் எஃகுக் கோட்டை என்பதை நிறுவும் சவால் அ.தி.மு.க-வுக்கு. யாருடைய சவால் வெல்லப்போகிறது? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

``பா.ம.கவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிப்பீர்....!’’ - திண்டுக்கல்லின் பிம்பிளிக்கி பிலாப்பி நிலவரம்

39 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் உதிக்குமா? அல்லது அ.தி.மு.க.வின் வாக்குவங்கியை நம்பி களம் காணும் பா.ம.க.வின் மாம்பழம் பழுக்குமா? திண்டுக்கல் கள நிலவரம்! ழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`ஓட்டு போடுங்கன்னு கால்ல விழ முடியாது!' - தம்பிதுரையை மீண்டும் எம்.பி ஆக்குமா கரூர்?!

 காங்கிரஸ் கோட்டையாக இருந்த கரூர் தொகுதி, எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய பிறகு அ.தி.மு.க.வுக்கான ஆதரவு பெருகிவிட்டது. `எம்.ஜி.ஆர் பக்தர்கள்' நிரம்பிய தொகுதி.   முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

அ.தி.மு.க-வின் A டீம் - B டீம் - C டீம்..! - `திருச்சி'யைக் கைப்பற்றுவது யார்?

முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பூமி. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் எனப் புகழ்பெற்ற ஸ்தலங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன. முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

பெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்! பாரிவேந்தருக்குக் கை கொடுக்குமா?!

பெரம்பலூர் தொகுதியில் புரளும் பணப்பட்டுவாடாவும் அ.தி.மு.க. அதிருப்தி கோஷ்டிகளும், பாரிவேந்தரை பாராளுமன்றத்துக்கு அனுப்புமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

காந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை!  - கடலூரைக் கைப்பற்றப் போவது யார்?

கூட்டணி பலம், சாதிய ஓட்டு எனக் கடலூரின் வெற்றி வேட்பாளர் யார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள்.  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`அந்த' 87 வாக்குகள்; பானை படும்பாடு; கரன்ஸி வீச்சு! - சிதம்பரம் தொகுதியின் களநிலவரம் இதுதான்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி, ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை பெருமைமிகு அடையாளங்கள்  வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை?  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

கார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம்! - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை

தோழமை கட்சிகளுக்கே தொடர்ந்து மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கியதால், கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை இங்கே தி.மு.க. - அ.தி.மு.க. நேரடி போட்டி!  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

மும்மதங்கள்; மரக்கிளை உணவு மூட்டை; கம்யூனிஸ்ட் கோட்டை! - நாகப்பட்டினம் களநிலவரம்

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி என்பதால், வறட்சி வெள்ளம் ஆகிய இரண்டாலும் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..

`சிங்காரம்’ ஃபார்முலா; மிரட்டும் ஆட்டோ; மெர்சல் அமமுக! - தஞ்சையைக் கைப்பற்றுவாரா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்?

மூன்று முக்கிய கட்சி வேட்பாளர்களும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே களமிறக்கப்பட்டுள்ளனர். இதுதவிர முத்தரையர் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் கணிசமான அளவில் உள்ளது. இவர்களின் வாக்குகளை பெறுவோருக்கு தஞ்சை மண்ணில் வெற்றி வந்து சேரும்.  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க.. 

`பர்தாவில் பிட்டு; ஜோசப் விஜய்; தேசத் துரோகி!’ - சிவகங்கையை வெல்வாரா ஹெச்.ராஜா?

மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, சிறுபான்மையினர் மீதான ஹெச்.ராஜாவின் விமர்சனங்கள் போன்றவை கார்த்தி சிதம்பரத்தின் பலமாக இருக்கிறது. இருப்பினும், ஹெச்.ராஜாவின் தாமரையை மலரவிடாமல் கை தடுக்குமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க.. 

கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?

எழுத்தாளர் டு வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு தேர்தல் களத்தில் சாதகமான விஷயங்கள் என்னென்ன, சவால்கள் என்னென்ன? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க.. 

தேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே..! - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா?

`ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான அதிருப்தியால் தொகுதி மக்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தையும் ரவியால் ஏற்படுத்த முடியாது' என எதிர்த் தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை மீறி ரவீந்திரநாத் குமார் தேனியில் தடம் பதிப்பாரா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க.. 

`கஷ்டப்படுறேன்’, ‘கந்துவட்டி’, ‘காலி தீப்பெட்டி’..! விருதுநகரின் கள நிலவரம்

தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அவர்களை கவரும் விதத்திலான உறுதியான வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை முன்னிறுத்தியே காங்கிரஸின் பிரசாரம் அமைந்திருக்கிறது.  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..  

மும்மதங்களின் சங்கமம்; சிவத்துரோகம்; 27 சதவிகித வாக்கு! - ராமநாதபுரம் தொகுதி நிலவரம் என்ன?

பணப்பட்டுவாடா, தேர்தல் கால வாக்குறுதிகளைத் தாண்டி ராமநாதபுரம் தொகுதிக்குள் ஏணி சின்னத்துக்கு ஏற்றம் கிடைக்குமா... தாமரை மலருமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க.. 

``தூத்துக்குடி கோட்டைக்குப் போகாதே!" - கனிமொழி vs தமிழிசை களநிலவரம்

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை என இரு பெண் வி.ஐ.பி-க்கள் களம் இறங்கியுள்ளனர். தொகுதிக்குள் இன்னமும் ஸ்டெர்லைட் விவகாரத்தின் தகிப்பு குறையவில்லை. முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..  

இப்படியும் ஒரு எம்.பி; எம்.ஜி.ஆரின் 5 லட்சம், தினகரனின் பலம்! - தென்காசியின் களநிலவரம் என்ன?

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் 'டாப்-5’ காரணிகள் எவை?  முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..  

`பதறவைத்த’ பெரியப்பா; `மெர்சல்’ மனோஜ்; `வாக்குறுதி’ திரவியம்! - நெல்லைத் தொகுதியின் களநிலவரம்

அரசியல் பின்புலமும் இரட்டை இலைக்கான செல்வாக்கும் தன்னைக் கரையேற்றும் என நம்பி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தி.மு.க. நிர்வாகிகள் களத்தில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகின்றனர். `இறுதி வெற்றி யாருக்கு?'  . முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..  

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

நாகர்கோவில் தொகுதியாக இருந்த வரையில், இங்கு வெற்றிபெறும் கட்சி அல்லது கூட்டணிக் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது சென்டிமென்டாக இருந்தது. தற்போது கன்னியாகுமரியாக மாறிய பிறகும் இதே சென்டிமென்ட்... முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..   

திரிசங்கு புதுச்சேரி.. பி.ஜே.பி. சங்கடம்... 25,000 பகோடாக்களில் ஆரம்பித்த கதை!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஆளுநர் கிரண் பேடி கொடுக்கும் நெருக்கடி, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் என மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி மக்களிடம், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்துகிறது காங்கிரஸ் கட்சி. இந்த யுக்தி என்.ஆர்.காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்படுத்துமா? முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..