Published:Updated:

ராகுல் டிராவிட் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது - இதுதான் காரணமா?

ராகுல் டிராவிட் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது - இதுதான் காரணமா?
ராகுல் டிராவிட் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது - இதுதான் காரணமா?

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்,  நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட் தொடர்ந்து தேர்தலில் வாக்களித்து வந்ததால், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவந்தார்.  டிராவிட்டும்  அவரது மனைவி விஜேதாவும், பெங்களூருவில் உள்ள இந்திரா நகரிலிருந்து அஷ்வத் நகருக்கு குடிமாறிவிட்டதாக, அவரது அண்ணன் விஜய், பெயர் நீக்கப்பட்டியலைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.  இதையடுத்து டிராவிட், விஜேதா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.  ஆனால், நீக்கிய பிறகு சேர்ப்பதற்கான ஃபார்ம் 6-ஐ டிராவிட் அளிக்கத் தவறிவிட்டார். இதனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் டிராவிட் வசித்துவரும் நிலையில், அவரால் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. 

இதுகுறித்து கர்நாடக தேர்தல் அதிகாரி கூறுகையில், ''ராகுல் வாக்களிக்க முடியாது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இறப்பு, இருப்பிட மாற்றம், பெயர் நீக்கம் என 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் ராகுல் விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை முன்னரே உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.