Published:Updated:

`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!

`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!
`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!

'நமது மண்ணைக் காக்க நாம போராடுவோம். உங்களில் ஒருவன் அல்லவா நான். உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' என்று கூறி, இறுதிக்கட்ட பரப்புரையை அண்ணாவின் நினைவாக உள்ள ஆலமரத்தின் கீழ்  தொடங்கினார் ஸ்டாலின்.

`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!

நாளை மறுநாள், மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் தனது இறுதிக்கட்ட பரப்புரையை இன்று மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனது பரப்புரையைத் தொடங்கினார். 

அதனைத் தொடர்ந்து, குடவாசல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், ``அண்ணா மறைந்தபோது குடவாசலில் இந்த ஆலமரம் நடப்பட்டது. அதன் நிழலில் நின்று பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். இது, கருணாநிதியின் மண். அதனால், உங்களிடையே அதிக நேரம் நான் பேச வேண்டியதில்லை. மோடி மற்றும் எடப்பாடி என்கிற கொடுமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். கஜா புயல் பாதித்தபோது,முதல்வர் ஹெலிகாப்டரில் வந்தார். 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்' என்பது உண்மையாகியுள்ளது. பிரதமர் ஒருமுறையாவது வந்து பார்த்தாரா. புயலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஒரு ஆறுதல்கூட சொல்லவில்லை. மோடி, இந்தியாவின் பிரதமரல்ல வெளிநாட்டின் பிரதமர். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை அடித்து வெளியே அனுப்பப்போகிறோம்.

`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!

கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தது இந்த எடப்பாடி அரசு. எப்படிப்பட்ட தலைவர் கருணாநிதி. உலகத் தமிழருக்கெல்லாம் தலைவர் கருணாநிதி. அவருக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன இந்த அயோக்கியர்களுக்கு நாம் மட்டும் ஏன் நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கையில் கொடுக்க வேண்டும்? இவர்களுக்குத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்" என்றார். அதனைத் தொடர்ந்து கொரடாச்சேரி பகுதியில் 2 வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், ``கலைஞரின் மகன் நான் மட்டுமல்ல நீங்களும்தான். இந்தத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள். மோடியின் தயவில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. 97 எம்.எல்.ஏ-க்கள் தற்போது உள்ளோம். வரப்போகும் 22 தொகுதி தேர்தலிலும் வெற்றிபெற்று 119 தொகுதியைப் பெற்று ஆட்சியமைப்போம். கருணாநிதி என்னைப் பற்றி பேசும்போது, உழைப்பு என்று சொல்வார். அதுதான் எனக்கு ஊக்கம். நான் திடீரென்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. படிப்படியாக வளர்ந்தவன்.

`உங்களுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்' - இறுதிக்கட்ட பரப்புரையில் ஸ்டாலின் உருக்கம்!

எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தேன். பாசிச சாடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் மோடி . அந்த மோடிக்கு ஏற்றவர்தான் எடப்பாடி. ஜாடிக்கு ஏத்த மூடி. மத்தியிலும் மாநிலத்திலும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம். எண்ணை எரிவாயுக் குழாய்கள் விளைநிலங்கள் வழியாகப் பதிக்கப்பட மாட்டாது. மேலும், விவசாயிகள் தங்களது நகைகளை அடகுவைத்திருந்தால், ஐந்து சவரனுக்குக் குறைவாக இருந்தால், அதனைத் தி.மு.க வெற்றிபெற்றவுடன் தள்ளுபடிசெய்து தரப்படும். மேலும், மற்றொரு அனிதா இறக்காமல் தடுக்க, நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து, கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் கோர்ட், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். மதியம், நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்யும் ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு திருவாரூரில் தனது பரப்புரையை நிறைவுசெய்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு