Published:Updated:

காரில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க-வினர்; பொறிவைத்துப் பிடித்த தி.மு.க-வினர்! - நீலகிரி தேர்தல் கலாட்டா

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், அ.தி.மு.க-வினர் பணப்பட்டுவாடா செய்தபோது தேர்தல் அதிகாரிகள் கண்முன்னே 3 பேர் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க-வினர்; பொறிவைத்துப் பிடித்த தி.மு.க-வினர்! - நீலகிரி தேர்தல் கலாட்டா

நீலகிரி மாவட்டம் கூடலூர் இந்திரா நகர் பகுதியில், கடந்த மூன்று தினங்களாக ஊருக்குள் புதிதாக  வெளியூரைச் சேர்ந்த கார் ஒன்று சந்தேகப்படும்படியாக அங்கும் இங்கும் சென்றுள்ளது. இதை உள்ளூர் தி.மு.க-வினர் நோட்டமிட்டுவந்துள்ளனர். தொடர்ந்து கண்காணித்து, சந்தேகத்துக்குரிய காரில் பணத்தை வைத்து  வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதை உறுதிசெய்த தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான தி.மு.க-வினர், தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வந்ததும், காரில் இருந்த இரண்டு நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். கார் மற்றும் அதன் ஓட்டுநரை  காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தபோது,  காரை நடுவழியில் நிறுத்திவிட்டு காரின்  ஓட்டுநரும் தப்பியோடியுள்ளார்.  பின்னர், வேறு ஒரு ஓட்டுநரை ஏற்பாடுசெய்து, கூடலூர் காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டது. 

காரில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க-வினர்; பொறிவைத்துப் பிடித்த தி.மு.க-வினர்! - நீலகிரி தேர்தல் கலாட்டா

தேர்தல் அதிகாரிகளால்  கார் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்து, அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க-வினர் காவல் நிலையம் முன்பாகக் குவிந்தனர்.  மேலும், உள்ளே நிறுத்தப்பட்டிருந்த காரை வெளியே எடுக்க முயன்றனர். அப்போது,  காவல் நிலையம் வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில், தி.மு.க-வினர்  காரை வெளியே எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் துறையிடம் வாக்குவாதம் செய்தனர். 

காரில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க-வினர்; பொறிவைத்துப் பிடித்த தி.மு.க-வினர்! - நீலகிரி தேர்தல் கலாட்டா

இதனால், தி.மு.க, அ.தி.மு.க-வினர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர், இரு தரப்பினரையும் வெளியேற்றிய போலீஸார், துணை ராணுவப் படையினரை காவலுக்கு அழைத்து, காவலுக்கு நிறுத்தினர்.  காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்த அதிகாரிகளை அ.தி.மு.க-வினர் மிரட்டியது தி.மு.க-வினரை அதிர்ச்சி அடையச் செய்தது. கூடலூர் தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அ.தி.மு.க-வினர் பணப்பட்டுவாடா செய்துவருகின்றனர். இதுகுறித்து  தேர்தல் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால்,  நாங்களாகவே கண்காணிப்பு நடத்தி  பணப்பட்டுவாடா செய்த காரை பிடித்துக் கொடுத்தோம். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கண்முன்னே பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க-வினர், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். கார் மற்றும் காரில் வந்தவர்கள்மீது காவல் துறையினர் முறையாக விசாரித்து வழக்குபதிவு செய்ய வேண்டும்” என்றார் .