Published:Updated:

`வெட்கத்தை விட்டு சொல்கிறேன்!' - கருணாநிதிக்கு நடந்த மெரினா போராட்டம் குறித்து ஸ்டாலின்

`வெட்கத்தை விட்டு சொல்கிறேன்!' - கருணாநிதிக்கு நடந்த மெரினா போராட்டம் குறித்து ஸ்டாலின்
`வெட்கத்தை விட்டு சொல்கிறேன்!' - கருணாநிதிக்கு நடந்த மெரினா போராட்டம் குறித்து ஸ்டாலின்

`வெட்கத்தை விட்டு சொல்கிறேன்!' - கருணாநிதிக்கு நடந்த மெரினா போராட்டம் குறித்து ஸ்டாலின்

சூலூர் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

`வெட்கத்தை விட்டு சொல்கிறேன்!' - கருணாநிதிக்கு நடந்த மெரினா போராட்டம் குறித்து ஸ்டாலின்

கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக, அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை இருகூர் ஞாயிறு சந்தையில் நடைப்பயணமாகச் சென்று, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, மாலை தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், சூலூர், கண்ணம்பாளையம், பாப்பம்பட்டி பிரிவு பகுதிகளில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ``மோடி, முதலாளிகளின் பிரதமராக இருக்கிறார். விவசாயிகளின் பொருளாதாரத்தை இரண்டு மடங்காக உயர்த்துகிறேன் என்று கூறினார். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வடைந்தன. ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு தொழில் நிறுவனங்களை நசுக்கினார்கள். தற்போது, கேபிள் டி.வி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் தவழ்ந்து முதல்வர் பதவி வாங்கினார். கொள்ளையடிப்பதற்காகத்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். கருணாநிதி உயிரிழந்தபோது, நான் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தலைவர் நினைவிடத்துக்கு மெரினாவில் இடமளிக்க அனுமதி கேட்டேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எடப்பாடியின் கையைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன். ஆனால், அவர்கள் இடம் கொடுக்கவில்லை. நீதிமன்றம் சென்றே நாம் வெற்றிபெற்றோம். தலைவருக்கு இடம் கொடுக்காத கயவர்களுக்கு தமிழகத்தில் நாம் இடம் கொடுக்கக் கூடாது. அண்ணாவின் நினைவிடம் அருகே, தன்னை அடக்கம் செய்ய வேண்டுமென்ற கருணாநிதியின் ஆசை நிறைவேறாமல் இருந்திருந்தால், நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்

ஏப்ரல் 18-ம் தேதி, எப்படி மோடியை வீட்டுக்கு அனுப்ப மதச் சார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்தோமோ... அதேபோல, வருகின்ற 19-ம் தேதி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெறுவது உறுதி. தற்போது, இந்த 4 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற்றால், 97 (தற்போதைய தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கை) + 22 = 119 என்ற எண்ணிக்கையில் நமது பலம் இருக்கும். ஆக, நாம் ஆட்சிக்கு வருவது உறுதி” என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு