Published:Updated:

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்
``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

தமிழகத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜய ராகவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக வியாழக்கிழமை கோவை வந்த சீமான், மாலை 4 மணி அளவில் சின்னியம்பாளையம் பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, அந்தக் கூட்டம் 5 மணிக்கு மாற்றப்பட்டது. சீமான் 7 மணி அளவில் சின்னியம்பாளையம் வந்தார்.

கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் விஜய ராகவன் ஆகியோர் பேசிய பிறகு, கடைசியாக மைக் பிடித்தார் சீமான். வழக்கம்போல சீமான் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்க, மேடைக்கு முன்பு இருந்த நபர் ஒருவர், சீமானின் பேச்சுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி ஆமோதித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சீமான், “ஐயா உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. அந்தக் கோபத்தை அப்படியே வாக்குப் பெட்டியில் எங்களுக்கு செலுத்திருங்க” என்று சொல்லி தனக்கே உரிய பாணியில் சிரித்தார் சீமான்.

குறிப்பாக, முரசொலி நாளிதழ் தலையங்கத்தில் தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் விமர்சித்ததால், தனது பேச்சில் தி.மு.க-வையும், ஸ்டாலினையும் கடுமையாக தாக்கிப் பேசினார் சீமான்.

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

``டிக்டாக் செயலியில் எனது ஆடியோக்களை இளைஞர்கள் அதிக அளவு தேர்ந்தெடுக்கின்றனர்.  அதனால்தான் அதற்குத் தடை விதித்தனர். இந்தியாவுக்கே நான்தான் பெரிய பிரச்னை. தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் சொன்னதைப் பார்த்துத்தான், தற்போது ராகுல் காந்தியும் அதே கருத்தைச் சொல்லியுள்ளார். அந்த அளவுக்கு மிரட்டி வைத்திருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினைவிட  என்னைத்தான் போட்டியாகப் பார்க்கிறார்.

என்னைப் பற்றியோ, எங்கள் கட்சி பற்றியோ ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முரசொலி நாளிதழில் தலையங்கமே வெளியிட்டுவிட்டனர். இனி நாங்கள்தான் தலையங்கம். ஆ.ராசாவுடன் விவாதத்துக்குத் தயாரா என்று கேட்கின்றனர். தி.மு.க-வை ராசாவுக்கு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். ராசா படிப்பாளி, அறிவாளி. அயோத்திதாசர் பற்றி ராசாவுக்குத் தெரியுமா என்று நான் கேட்கவில்லை. உங்கள் கட்சித் தலைவருக்கு அவரைப் பற்றி தெரியுமா? அவரை வரச் சொல்லுங்கள் விவாதத்துக்கு.

நான் வாய்ச் சொல் வீரர் என்றால், ஸ்டாலின் வாள் சொல் வீரரா? நான் அதற்கும் தயார். வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா... எதுவாக இருந்தாலும் சரி. ஸ்டாலினா?, உதயநிதி ஸ்டாலினா? யார் வந்தாலும் சரி. உங்களை முழுவதுமாக ஒழிக்காமல் நான் போக மாட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒரு புள்ளை பூச்சி. அவரையே உங்களால் சமாளிக்க முடியவில்லை. கமலும், தினகரனுமே கூட்டணியாகத்தான் தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை.  அடுத்த தேர்தல்களிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம்.

``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!" - ஸ்டாலினை சீண்டும் சீமான்

மக்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால், சட்டசபையில் அவர்களின் பலம் அதிகரித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்கள். தி.மு.க-வுக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்தால், மற்ற எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து பொங்கலூர் பழனிசாமியும் (சூலூர் தி.மு.க வேட்பாளர்) வெளிநடப்பு செய்வார். அவ்வளவுதான். இவர்களால் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. இந்த ஒருமுறை சின்னத்தை பார்க்காமல், எண்ணத்தைப் பார்த்து வாக்களியுங்கள். மாற்றத்தை நாங்கள் கொடுக்கிறோம்” என்று சீமான் பேசினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு