Published:Updated:

`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு!'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு

துரை.வேம்பையன்
`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு!'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு
`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு!'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு

'அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீருவது' என்ற முனைப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி, வாக்காளர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்க இருப்பதாகச் சொல்லப்படும் தகவலால் அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு!'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு

மக்களவைத் தேர்தலும் தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும், கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அதேபோல, இன்னும் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வி.வி.செந்தில்நாதனும் அ.ம.மு.க கட்சியின் வேட்பாளராக பி.ஹெச்.ஷாகுல் ஹமீது களத்தில் இருக்கிறார்கள். மூவரும் அனல்பறக்கும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். மூவரும் தங்களது வெற்றிக்காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்துவருகிறார்கள். இதனால், வாக்காளர்கள் காட்டில் பணமழை.

இந்நிலையில், 'செந்தில் பாலாஜியை எப்படியும் தோற்கடித்தே தீரவேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் செங்கோட்டையன், தங்கமணி, லோக்கல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று எட்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தொகுதியைக் குறிவைத்து வலம்வந்துகொண்டிருக்கிறது. 'மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போல கட்சி மாறுபவர் செந்தில் பாலாஜி. அவருக்கா உங்கள் ஓட்டு' என்று முதல்வர் தொடங்கி சாதாரண பேச்சாளர் வரை செந்தில் பாலாஜியை மட்டும் கார்னர் பண்ணி பேசிவருகிறார்கள். அ.ம.மு.க பக்கமும் டி.டி.வி.தினகரன் இரண்டு நாள்கள் டூர் அடித்து, செந்தில் பாலாஜி பற்றி கட்டமாகப் பேசினார். ஆனால், இதைபற்றி எல்லாம் கவலைப்படாத செந்தில் பாலாஜி, 'எப்படி ஜெயிப்பது' என்று தேர்தல் யுக்திகளைச் செயல்படுத்திவருகிறார்.

`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு!'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு

இதுபற்றி பேசிய கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலர், "முதல்வரும் தம்பிதுரையும், லோக்கல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் என்ன விலை கொடுத்தாவது செந்தில் பாலாஜியைத் தோற்கடிக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனால் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவியபோது, 'கரூர் நாடாளுமன்றத் தொகுதியையும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க வசமாக்குவேன்'னு ஸ்டாலினிடம் உத்தரவாதம் கொடுத்தார். அதன்விளைவாக, கட்சி மாறிய 41 நாள்களிலேயே ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்தார். அதனால், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி ஜெயிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் ஓட்டுகளான பள்ளப்பட்டி உள்ளிட்ட தொகுதியில் உள்ள 60,000 இஸ்லாமியர் வாக்குகளைப் பெருமளவில் கவர காய்நகர்த்திவருகிறார். அதோடு, தொகுதியில் உள்ள 25,000 ஏழைகளுக்கு இரண்டு சென்ட் வீட்டுமனை என்று அதிரடியான வாக்குறுதிகளைக் கொடுத்துவருகிறார். ஆனால் வெற்றி, தோல்வியை கடைசிநேர பணப் பட்டுவாடா நிர்ணயிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், வாக்காளர்களைக் கவர, செந்தில்பாலாஜி புது பிளானில் இருக்கிறதா சொல்றாங்க. அ.தி.மு.க தரப்பில் பணம் அதிகமா கொடுத்தால், வாக்காளர்களைக் கவர இன்னும் சில பொருள்களை வழங்க இருப்பதாகச் சொல்றாங்க" என்றார்கள்.


 

Vikatan