Published:Updated:

`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி

சகாயராஜ் மு
`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி
`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி

"தேனியில யாருமே மறுவாக்குப்பதிவு நடத்துங்கன்னு கேட்கல. அங்கு எதற்கு மறுவாக்குப்பதிவு" என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி.

`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, "கடந்த இரண்டு வருடங்களாக பா.ஜ.க, அ.தி.மு.க ஆட்சியில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை. இதை நாங்கள் சொல்லவில்லை, மக்களே சொல்கிறார்கள். மதுரை வாக்குப்பெட்டி இருந்த மையத்துக்கு ஒரு அதிகாரி இரவு 3 மணிக்கு போறாங்க. 3 மணி நேரம் உள்ளே இருக்காங்க. இதற்கான விளக்கம் ஏற்றுக்கொள்கிற மாதிரி இருக்கா. அங்கே செக் பண்ண போனாங்கன்னு சொல்றாங்க. ஓட்டுப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்து உள்ளே வைத்து அந்த ரூமை மூடியாச்சே. அந்த பில்டிங்குக்குள் போவதற்கு முதல்வருக்கே அனுமதி கிடையாது. அப்படி நீங்க போறதாக இருந்தா, அனைத்து வேட்பாளர்களிடமும் சொல்லணும். அத்தனை பேரையும் அவர் வரச்சொல்லணும். அவங்க முன்னாடி வெச்சிக்கிட்டு எல்லாமே பண்ணணும். அந்த ரூம் திறக்கல, அடுத்த ரூமுக்கு போனேன் என்று சொல்றது எல்லாம் நம்புற மாதிரி இல்ல.

`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி

அதைவிட கொடுமை, தேனிக்கு வாக்குப்பெட்டிகளைக் கொண்டுபோறாங்க. சாகு தேர்தல் ஆணையரா அல்லது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான்னு தெரியல. அவர் தேர்தல் ஆணையர் மாதிரி நடந்துக்கல. அவர் ஏற்கெனவே மெட்ரோ வாட்டர் போர்டில் எம்.டி-யாக இருந்தவர். அந்த விசுவாசத்தில்தான் இன்னும் இருக்கிறார் போல. நடுநிலையே இல்லாத ஒரு பதிலைச் சொல்கிறார். அதாவது, மறுவாக்கு வரப்போகிறது என்பதற்காக பெட்டிகளை மாத்துனாங்களாம். அவருக்கு 20 நாள் கழித்துதான் தெரியுமா? கேட்டது சில இடங்களில். முக்கியமாக, திருச்சியில் எங்க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நிற்கிறாங்க. அவங்களுடைய இடத்திலேயே பல வாக்குச்சாவடிகளில் ஒன்னா நம்பர் பெட்டி இரண்டாம் நம்பர் பெட்டிக்கும் இரண்டாம் நம்பர் பெட்டி ஒன்னா நம்பர் பெட்டிக்கும் மாத்தி வைக்கப்பட்டது. அவங்க, கலெக்டர் வரைக்கும் புகார் கொடுத்தாங்க. "இந்த  மாதிரியெல்லாம் நடந்திருக்கு. இரண்டு மூன்று இடத்துல மறுவாக்குப்பதிவு நடத்துனும்னு சொன்னாங்க". ஆனா,  மறுவாக்குப்பதிவில் அந்த ஏரியா வரல.

`என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில!'- ஓ.பி.எஸ் மீது சந்தேகப்படும் சி.ஆர்.சரஸ்வதி

தேனியில யாருமே மறுவாக்குப்பதிவு நடத்துங்கன்னு கேட்கல. அங்கு எதற்கு மறுவாக்குப்பதிவு. என்ன சொன்னாங்க வாரணாசியில. என்ன ஐடியா பண்ணினாங்க வாரணாசியில. ஓ.பி.எஸ் மகன் நிற்கிறதுனால கேட்காத இடத்துல மறுவாக்குப்பதிவு. கேட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு கிடையாது. 46 இடங்களில் மறுவாக்குப்பதிவு என்று சொன்னாரு சாகு. ஆனால் இன்றைக்கு, 13 இடம் என்கிறார், 15 இடம் என்கிறார். முதலில் மறுவாக்குப்பதிவு யார் கேட்டாங்களோ, அதாவது பாப்பிரெட்டிப்பட்டியில கேட்டிருக்காங்க. கடலூரில் கேட்டிருக்காங்க. விழுப்புரத்தில் கேட்டிருக்காங்க. அங்க சரி. கேட்காத இடங்களில் ஏன் மறுவாக்குப்பதிவு நடத்துறீங்க. உண்மையா கேட்கிற இடத்துல ஏன் பண்ண மாட்டேங்கிறீங்க. பெட்டியை ஏன் கொண்டுபோனீங்க. அதற்கான காரணத்தை சொல்லியே தீரணும். சாகு பதவி விலகியே தீரணும். 20 நாள்கள் கழித்து எக்ஸ்ட்ரா பெட்டிகளைக் கொண்டுபோனோம் எங்கிறீங்க. எக்ஸ்ட்ரா பெட்டி எப்போது கொண்டுப்போவாங்க. வாக்குப்பதிவு எல்லாம் முடிந்த பிறகு 24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட பிறகு ,மீதி இருக்கிற காலிப் பெட்டிகளைக் கொண்டுசெல்வாங்க. அது, 24 மணி நேரத்துக்குள் நடக்கும். 20 நாள்களுக்கு அப்புறம் நடக்காது.

இது, யாரை காப்பாத்துறதுக்கு. யாரை வெற்றிபெறச் செய்வதற்காக. இது, வாரணாசியில் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்று நாங்க கேட்கல, மக்கள் கேட்கிறாங்க. தேர்தல் ஆணையம் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த ஆட்சியில் இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு துரோகம் நடக்குது. மக்கள் ஓட்டு போட்டுருக்காங்க. தீர்ப்பை மக்கள் சொல்லட்டும். மே 23-ம் தேதி எண்ணுங்க. மக்களோட தீர்ப்பு அப்போது வரட்டும். இப்படி பெட்டியை மாத்துறது, காரணத்தை சொல்றது. உங்க இஷ்டத்துக்கு மறுவாக்குப்பதிவு, கேட்காத இடத்தில் எல்லாம் மறுவாக்குப்பதிவு நடக்கும் என்று சொல்றது எல்லாம், மக்களை ஏமாற்ற நினைக்கிறீங்க. நிச்சயமாக இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். இதற்கான பதிலை தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும். இல்லையென்றால், சாகு பதவி விலக வேண்டும்" என்று ஆவேசத்துடன் முடித்தார்.