Published:Updated:

`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்

`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்
`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்

கிழக்கு டெல்லியில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடக்கிறது. கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நிறுத்தப்பட்டிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி குறித்து அவதூறு கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக அக்கட்சியினர் கௌதம் கம்பீர் மீதும் பா.ஜ.க மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிஷி கண்கலங்கினார். 

`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் கம்பீர். குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தான் போட்டியிலிருந்தே விலகிவிடுவதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று தன் மீதான குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்தால், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாக கம்பீர் கூறியிருக்கிறார். பெண்கள் குறித்து கண்ணியம் குறைவாக கம்பீர் பேச மாட்டார் என அவருக்கு ஆதரவாக வி.வி.எஸ். லட்சுமணன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். 

`பிரசாரத்துக்கு டம்மி நபர்; பொதுவெளியில் தூக்கில் தொங்குவேன்!' - சர்ச்சைகளின் நாயகனான கம்பீர்

இந்தநிலையில், கடும் வெயிலில் பிரசாரம் செய்ய முடியாமல், தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபரை கம்பீர் பணியமர்த்தி இருப்பதாக ஒரு புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கம்பீர், காருக்குள் அமர்ந்திருக்கிறார். ஆனால், கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு அவர்போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கி கையசைத்தபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுபோல் இருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் காட்சி உண்மையா அல்லது போட்டோஷாப் புகைப்படமா என சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அந்தப் புகைப்படம் உண்மையா?... உங்கள் கருத்துகளை கமென்டில் தெரிவிக்கலாம்.