Published:Updated:

`இவர்களை வீழ்த்தத் திட்டமெல்லாம் தீட்டத் தேவையே இல்லை!' - கமல்ஹாசன்

`இவர்களை வீழ்த்தத் திட்டமெல்லாம் தீட்டத் தேவையே இல்லை!' - கமல்ஹாசன்
`இவர்களை வீழ்த்தத் திட்டமெல்லாம் தீட்டத் தேவையே இல்லை!' - கமல்ஹாசன்

'மோசமான அரசும்,அரசியல் சூழலும்  அகற்ற்பபட வேண்டும் என்று எல்லா மக்கள்  மனதிலுல் தோன்றிவிட்டது. இவர்களை வீழ்த்த திட்டம் தீட்டத்தேவை இல்லை. அது ஓட்டைக் கப்பல் மூழ்கியே தீரும்' என்று சூலூரில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

`இவர்களை வீழ்த்தத் திட்டமெல்லாம் தீட்டத் தேவையே இல்லை!' - கமல்ஹாசன்

சூலூர் தொகுதி இடைதேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து, நேற்று  கமல்ஹாசன் பல்வேறு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இறுதியாக இருகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், " இந்த மோசமான அரசும்,அரசியல் சூழலும்  அகற்ற்பபட வேண்டும் என என் மனதில் மட்டுமல்ல எல்லா மக்கள்  மனதிலுல் தோன்றிவிட்டது. இந்த தருணத்தில்தான்  நாம் கால் எடுத்து வைத்துள்ளோம். மற்ற கட்சியினர் மக்களைக் கெஞ்சி கூப்பிட்டு கூட்டம் சேர்கின்றனர். இது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் சேர்ந்த கூட்டம் அல்ல. மாற்றத்திற்காக சேர்ந்தக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருக்கும்  எல்லோருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர்கள். இது அரை நூற்றாண்டில் கண்டிராத எழுச்சி. அதன் பெரும் பங்காளிகளாக நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள்  வானாளாவிய வாக்குறுதிகள் என்று எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. அவர்கள் செய்யத் தவறியதை, செய்ய வேண்டியதை நாங்கள் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம். இந்த வாக்குறுதிகள் உங்களுக்காக மட்டும் சொல்லப்பட்டவை அல்ல இவற்றையெல்லாம் செய்தே ஆகவேண்டும் என்று எங்களுக்குள் உறுதி கொண்டுள்ளோம்.

`இவர்களை வீழ்த்தத் திட்டமெல்லாம் தீட்டத் தேவையே இல்லை!' - கமல்ஹாசன்

மற்ற எந்தக் கட்சிகளிலிலும் பார்திரவே முடியாத புதுமையான விஷயங்களை மக்கள் நீதி மய்யம் செயல்படுத்துகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சித் தலைமையகம் இருக்கும் அங்கே என் அலுவலகம் இருக்கும். இந்தக் கூட்டம் முடிந்தபின்பு இங்குள்ள குப்பைகளை அகற்றிவிட்டுத்தான் எங்கள் தன்னார்வலர்கள் வீடு திரும்புவார்கள். இப்படி சின்னச்சின்ன விஷயங்களிலும் மாற்றத்தை விரும்புகிறோம் செயல்படுத்துகிறோம்.

ஒரு சமயத்தில் என் வீடு பறிபோக இருந்தபோது நான் பதறித்தான் போனேன். அப்போது பலர் தங்கள்  வீட்டுச்சாவிகளை பத்திரத்தோடு எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதுவரை உலக நாயகன் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த நான், அன்றிலிருந்து உங்களில் ஒருவனாக ஆகிவிட்டேன். இப்படி ஒரு சர்வாதிகாரமான  ஆட்சி இங்கே இருக்கக்கூடாது என்று நான் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள்

எங்கள் வேட்பாளர் மயில்சாமி வெற்றிபெற்றால் அவருக்கு வழங்கப்படும்  மாத ஊதியத்தை மக்களுக்காக செலவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். 2 ரூபாய் சம்பளம் கொடுங்கள் போதும் என்று அவர் கேட்கவில்லை. `என் சம்பளத்தை முழுதாகக் கொடுங்கள் அதை மக்களுக்கு செலவிடுகிறேன்' என்று சொல்லியிருக்கிறார். நிறைய லட்சியங்கள் இருக்கின்றன அவற்றுள் முக்கியமானது ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவது.

அடுத்து வரப்போகிற இருநூற்றி சொச்சம் தொகுதிகளின் தேர்தலுக்கான ஒத்திகைதான் தற்போது நடைபெறும் தேர்தல். உங்களுக்கான மதிப்பை நீங்கள் உணருங்கள். உங்கள் பையிலிருந்து திருடிய பணத்தில் சில்லறையைத் தூக்கி எறிகிறார்கள். யார் பணத்தை யாருக்கு கொடுக்கிறார்கள்?. அந்தப் பணத்தை நீங்கள் வாங்கிவிட்டால், பின்பு உங்களால் கேள்வி கேட்க முடியாது, கேட்டால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இவர்கள் எவ்வளவு திருடினார்கள் என்ற அசிங்க கணக்கை நாங்கள் சொல்லத் தேவை இல்லை. அவர்களே அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் ஆசைக்கும் கமிஷனுக்காகவும்  பசுமை வழிச்சாலையெல்லாம் நாங்கள் போடமாட்டோம். மக்களின் தேவை அறிந்து செயல்படுவோம்.

இந்த 'டார்ச் லைட்'ஐ உங்கள் வீட்டின் ஒளி விளக்காக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கிராம பஞ்சாயத்தை வலிமைப்படுத்திக் கொண்டே வந்தால் சட்டம் உங்கள் கையில் இருக்கும் அவர்கள் கையில் இருக்காது. காந்தியார் இதைத்தான் செய்தார். ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு கஜானாவை காலி செய்துவிட்டுப் போகப்போகிறார்கள். அடுத்துவரும் ஆட்சியாளர்கள் எவ்வளவு நேர்மையானவர்களாக இருந்தாலும் எவ்வளவு பாடுபட்டு அதை சரி செய்ய வேண்டும் தெரியுமா?. இவர்களை வீழ்த்தத் திட்டம் தீட்டத்தேவை இல்லை. அது ஓட்டைக் கப்பல் மூழ்கியே தீரும்" என்றார்.