Published:Updated:

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?
`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

இதுவரை பயிற்சி ஆட்டத்தில்கூட பங்குபெறாத சூப்பர் ஸ்டார்கள், இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுச் செல்லும் இரட்டைத் தலைவர்கள். புதிய புதிய அணிகளைக் கட்டமைக்கும் கூட்டணிக் குருநாதர்கள். தமிழகம் கவனிக்காத மாற்று சக்திகள் எனப் பலரும் தமிழக அரசியல் களத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

``உனக்கு ரஜினி பிடிக்குமா இல்ல, கமல் பிடிக்குமா?" என்பதுபோல் ``நீ சென்னையா, இல்ல மும்பையா?" என்ற கேள்விதான் ஐபிஎல், இறுதிப் போட்டியை ஒட்டி, கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் கேட்கப்பட்டுவந்த கேள்வி. ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியால் `லவ் யூ ‘தல’ தோனி', 'லவ் யூ வாட்சன்' என்ற ஸ்டேட்டஸ்போட்டு ஆழ்ந்த துக்கத்தின் மூலம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் சென்னை ரசிகர்கள். ஐபிஎல் பரபரப்பு ஒருவழியாக முடிந்த நிலையில், தேர்தல் பரபரப்பு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 50 ஆண்டுகளில் அரசியலும், சினிமாவும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தே உள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர்களும் அரசியல் கனவுகளோடு ஆட்சிமன்றங்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். `அரசியல் மாற்றம் வேண்டும்' எனச் சொல்லி பி.ஜே.பி-யில் இணைந்து டெல்லியில் போட்டியிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.

ஐபிஎல் இறுதி ஆட்டம் நடைபெறும் அதேநாளில் தன்னுடைய தேர்தல் ஆட்டத்தை ஆடி முடித்துள்ளார் கம்பீர். போட்டிகளின்போது நடுவர்களுடன் மல்லுக்கட்டுபவர் தேர்தல்களத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீசிய பந்துகளை விரட்டிய விரட்டில் மான நஷ்ட வழக்கைத் தான் வாங்கிய கோப்பைகளில் ஒன்றாகச் சேர்த்துள்ளார். ஆக, அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்றாகவே பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தின் அரசியல் களத்தோடு ஒத்துப்போகின்றன.

மய்யம் கொண்ட நடுவர்

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, நடந்த தர்மயுத்தத்தின் மாற்று வடிவம் கமலின் அரசியல் வருகை. `டெல்லியில் அமைந்துள்ள அந்தப் பச்சைக் கிணற்றின் (நாடாளுமன்றக் கட்டடம்) மீது எனக்கு நம்பிக்கையில்லை. வாக்கு அரசியலில் பங்குபெறாமல் மக்களுக்கு உழைத்த பெரியார், காந்தி போன்ற பலர் இருக்கின்றனர்’ எனச் சொல்லி வந்தவர், கலாம் நினைவிடத்தில் சலாம் போட்டு கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர் முன்வைக்கும் மய்ய அரசியல்தான் கொஞ்சம் மந்தமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் எப்போது நீங்கள், எதன் பின்னர் நிற்கிறீர்கள் என்பதன் பொருட்டே மக்கள் உங்கள் பின் நிற்பார்கள்.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

தேர்தலில் அ.தி.மு.க, பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்தாலும் கட்-அவுட்களில்கூட பெரியாரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் மையம் கொண்டிருப்பது கமல் மட்டுமே. நீங்கள் சி.எஸ்.கேவா இல்லை, மும்பையா எனக் கேட்டால் வழக்கம்போல போட்டி நடுவர் பொறுப்பையே ஏற்பார் கமல்ஹாசன். அரசியலிலும் மய்யம் தொடர்ந்தால் மக்கள் ஏற்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அவர்தான் பாஜி!

கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அஸ்வினைக் கைவிட்டு, ஹர்பஜன் சிங்கைக் கையில் எடுத்தது. நன்றியை ஆங்கிலத்தில் சொல்லி புது அணிக்குத் தாவினார் அஸ்வின். ``வணக்கம், தமிழ்நாடு, இனி கிரிக்கெட் ஆடப் போறேன், சந்தோஷமா உங்க மண்ணு இனி எங்களை வைக்கும் சிங்கமுன்னு” என அட்மின் எல்லாம் வைத்து தமிழில் ட்வீட் போட்டுக் களமாடத் தொடங்கினார் ஹர்பஜன் சிங். சமூக வலைதளங்களில் தமிழால் ட்ரெண்டான ஹர்பஜனால் மைதானத்தில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது. பேருக்கு சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ரன்களை வாரிவழங்கும் அவரின் தாராள மனம்தான் மாற்று அணியினருக்கு அவரிடம் பிடித்தது.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மேடைகளில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், அகநானூறு, புறநானூறு என எல்லாம் முழங்க, சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று டிரெண்டானார். ஆனால், தேர்தல் அரசியலில் அவர் எடுபடாமல் போனார். இப்போதுதான் ஒரு சதவிகித வாக்குவங்கியைத் தொட்டுள்ளார். `சமூக வலைதள அரசியல் வேறு, சமூக அரசியல் வேறு' என்பதைச் சீமான் இப்போது புரிந்துகொண்டிருப்பார்.

வெற்றிகரமான தோல்வி:

`உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்' எனப் பெயரெடுத்தாலும் நடந்து முடிந்த ஐபிஎல். தொடர் என்பது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மோசமான காலகட்டம்தான். ஐபிஎல்லில் தனிநபர் ரன் குவிப்பில் 5,000 ரன் கடந்து `டாப்’பில் இருந்தாலும். விராட்கோலி விளையாடிய பெங்களூர் அணிதான் இதுவரை இந்தத் தொடரில் அதிக தோல்விகளைச் சந்தித்துள்ளது. சமீபத்தில் தோல்வி ஒன்றுக்குப் பிறகு பேசிய கோலி `இது ஒன்றும் மோசமான தோல்வி இல்லை’ என்றார். இதுவும் சமீபத்தில் தமிழகத்தில் பழக்கப்பட்ட வார்த்தைதான்.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

நாடாளுமன்றத் தேர்தலின் அரையிறுதி தேர்தல் என வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி தோல்வியைச் சந்தித்தது. ``இதுவெற்றிகரமான தோல்விதான்” எனச் சமாதானம் சொன்னார் பி.ஜே.பி-யின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். என்னதான் மற்ற மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றிகளைப் பெற்றாலும், தமிழகத்தில் தாமரை மலர முடியாத அதிசயப் பூவாகவே உள்ளது. கிரிக்கெட்டில் கோலி உலக நாயகனாகத் திகழ்ந்தாலும் இந்த ஐபிஎல்லில் அவரால் வெற்றிக் கனியை பழுக்க வைக்க முடியவேயில்லை.

சி.எஸ்.கேவும்  தி.மு.கவும்

சதியோ, விதியோ மும்பையுடன் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சென்னை அணி.  மும்பை அணிக்குப் பொன்மயமான காலமொன்றிருந்தது. அந்தக் காலகட்டத்தின் கதாநாயகன் சச்சின். தமிழகத்தைச் சேர்ந்த பலரும் சச்சினின் தலைமைக்காகவே மும்பையின் ரசிகர்களாக இருந்தார்கள். இந்த ஐபிஎல்லில் அவரைப் போன்ற பெரிய தலைமை இல்லாத நிலையிலும் ஜொலிக்கிறது மும்பை இந்தியன்ஸ். தமிழகத்திலும் அந்தப் பழைய மும்பை ரசிகர்கள் இன்னும் அப்படியே  தொடர்கிறார்கள்.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

கிட்டத்தட்ட இதே நிலைதான் அ.தி.மு.க-வுக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக, மூன்றாக, நான்காக…. எனப் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, இன்றும் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஐபிஎல் ஃபைனலில் 150 ரன் டார்க்கெட்டை நோக்கிக் களமாடிய சென்னை அணிக்கு நான்கு கேட்ச் மிஸ், 9 எக்ஸ்ட்ரா, 5 ஓவர் த்ரோ என பல வாய்ப்புகள் கிடைத்தாலும், இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒருமுறை மும்பையை ஜெயித்துவிட வேண்டும் என்ற சென்னையின் கனவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர் மும்பை அணியினர். தமிழக முதல்வர் கனவோடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலம்வரும் நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம், 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு, அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், அ.தி.மு.க. தலைமையின் மீதான அதிருப்தி எனப் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆட்சிக் கவிழ்ப்பு கனவு `வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ' எனும் நிலையிலேயே நீடிக்கிறது. சென்னை ரசிகர்கள் மும்பையை ``ஃபைனல் வா பாத்துக்கலாம்" எனச் சொன்னதுபோல, தற்போது அ.தி.மு.க-வுக்கு மே 23-ம் தேதி குறித்திருக்கிறது தி.மு.க. ஒருவேளை அங்கும் தோல்வியைச் சந்தித்தால் அடுத்த ஆண்டு ஐபிஎல். தொடரைப் போன்று, அடுத்தத் தேர்தல் வரட்டும் என தி.மு.க. காத்திருக்க வேண்டியதுதான்.

தோனி யார்?

ராஜஸ்தானுடனான மேட்சில் இரண்டு நடுவர்களும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கிய சம்பவம், கூல் கேப்டனான தோனியை  கோபத்துடன் மைதானத்தின் மையத்தை நோக்கி வரவைத்தது. தமிழக மக்கள் என்னதான் அமைதி காத்தாலும் தேவையான சூழலில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தே வந்துள்ளனர். அதேபோல், எப்போதும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளையே தமிழகத் தேர்தல் அரசியலிலும் வழங்கி வந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள தேர்தலுக்கான விடையையும் ஏற்கெனவே (ஏப்ரல் 18) பதிவு செய்துள்ளனர்.

`சி.எஸ்.கே' தி.மு.க... `மும்பை இந்தியன்ஸ்' அ.தி.மு.க..! EPL-ல் ஜெயிப்பது யார்?

இதுபோக, இதுவரை பயிற்சி ஆட்டத்தில்கூட பங்குபெறாத சூப்பர் ஸ்டார்கள், இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுச் செல்லும் இரட்டைத் தலைவர்கள். புதிய புதிய அணிகளைக் கட்டமைக்கும் கூட்டணிக் குருநாதர்கள், தமிழகம் கவனிக்காத மாற்றுசக்திகள் எனப் பலரும் தமிழக அரசியல் களத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனாலும்... ஒருவேளை, ஐபிஎல் இறுதிப்போட்டி தினத்தைப் போன்று, எலக்ஷன் பிரீமியர் லீகில் (Election Premier League), அதாவது மே 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிலும் சென்னை அணி நூலிழையில் தோற்று, மும்பை அணி ஜெயித்துவிட்டால் என்னவாகும் தமிழக அரசியல்? பொறுத்திருந்து பார்ப்போம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு