Published:Updated:

‘4 சட்டமன்றத் தொகுதி; 59 நாடாளுமன்றத் தொகுதி’- இன்றுடன் ஓய்கிறது வாக்குப்பதிவு

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழுக் கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறுக் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘4 சட்டமன்றத் தொகுதி; 59 நாடாளுமன்றத் தொகுதி’-  இன்றுடன் ஓய்கிறது வாக்குப்பதிவு

இன்றைய ஏழாவதுக்கட்ட வாக்குப்பதிவு, பிஹார் (8), ஜார்கண்ட் (3), மத்தியப் பிரதேசம் (8), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), ஹிமாசால பிரதேசம் (4), பஞ்சாப் (13), சண்டிகர் ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. இன்றைய மக்களவை தேர்தலில் சுமார் 10 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த எட்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி உள்பட  918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 1.12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

‘4 சட்டமன்றத் தொகுதி; 59 நாடாளுமன்றத் தொகுதி’-  இன்றுடன் ஓய்கிறது வாக்குப்பதிவு

இதற்கிடையில் தமிழகத்திலும் இன்று சூலூர், அரவகுறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் இங்கு மட்டுமே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அரவக்குறிச்சித் தொகுதியில் 2,05,273 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு மொத்தம் 2,33,847 வாக்காளர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் 71 பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘4 சட்டமன்றத் தொகுதி; 59 நாடாளுமன்றத் தொகுதி’-  இன்றுடன் ஓய்கிறது வாக்குப்பதிவு

அதேபோல் கோவை மாவட்டம் சூலூரில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு மொத்தம் 2,95,158 வாக்காளர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் உள்ளன அதில் 130 பதற்றமானவை.  மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்ற சட்டமன்றத் தொகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. இங்கு மொத்தமாக 3,04,478 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் 37 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது சில தொகுதிகளில் பிரச்னை ஏற்பட்டது. சில வாக்குச்சாவடிகள் கட்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் பிரச்னை ஏற்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. அதுவும் இன்று நடைபெறுகிறது.  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய அனைத்து தொகுதிகளின் தேர்தல் முடிவும் வரும் 23-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு