Published:Updated:

`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்!' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு

`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்!' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு
`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்!' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு

`தேர்தலுக்குப் முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளைக் கடந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்' என்று நம்பிக்கையுடன் பேசி  வருகிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்களும் நிர்வாகிகளும்.

`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்!' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு

மதுரையில் நடந்த வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``திருப்பரங்குன்றம் தொகுதியில் 16 மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து கடந்த 20 நாள்களாக தீவிரமாக களப்பணி ஆற்றியிருக்கிறோம். நமக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டனர். சீனிவேல் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 45,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது முனியாண்டி ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதுபோல் அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கவனமாகப் பணியாற்றுங்கள்'' என்று பேசினார். 

` `எக்ஸிட் போல்' முடிவுகள், தி.மு.க., அ.ம.மு.க-வின் தீவிர பிரசாரங்கள், அ.தி.மு.க வெற்றியைப் பாதிக்காதா?' என்று ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம்.``நாங்கள் பார்த்த களப்பணியை யாரும் பார்க்கவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வாக்காளரையும் எங்கள் நிர்வாகிகளுக்குத் தெரியும். உதாரணத்துக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் மறைவுக்குப்பின் கடந்த இரண்டு வருடங்களாக அத்தொகுதி  மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம்.

ஒவ்வொருவரின் குறைகளும் உடனே தீர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் பயனடையாத மக்கள் யாரும் அங்கு இல்லை. அப்படியிருக்கும்போது இந்தமுறை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை உறுதியாகச் சொல்கிறோம். தி.மு.க-வுக்கு வேலை செய்ய ஆளே இல்லை, வெளியூரிலிருந்து கூட்டி வந்த ஆட்களெல்லாம் நல்லா சாப்பிட்டு ஊரைச் சுத்திப் பார்த்துட்டுப் போயிட்டாங்க. 

டி.டி.வி அணியினர் ஒரு பொருட்டே அல்ல, சொற்ப வாக்குகள்தான் வாங்குவார்கள். அவ்வளவுதான். இதுபோலத்தான் நாடாளுமனறத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். பா.ம.க., புதிய தமிழகம், தே.மு.தி.க. போன்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வாங்கி சாதாரணமானது அல்ல. டி.டி.வி பிரிப்பதாகச் சொல்லும் வாக்குகளை இந்தக் கட்சிகளின் வாக்குகள் சமன் செய்யும். தி.மு.க-வுக்கு வழக்கமாக விழும் வாக்குகள் முழுமையாக இந்த முறை கிடைக்காது. அதனால், அனைத்து நாடாளுமன்ற, 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி, இந்தக் கணிப்புகளை தூக்கி வீசிவிட்டு அமோக வெற்றி பெறும்'' என்றார். அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இதே டோனில் பேசுகிறார்கள். 

Vikatan