Published:Updated:

உ.பி-யில் பா.ஜ.கவுக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள்தாம்!

ந.பொன்குமரகுருபரன்
உ.பி-யில் பா.ஜ.கவுக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள்தாம்!
உ.பி-யில் பா.ஜ.கவுக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள்தாம்!
உ.பி-யில் பா.ஜ.கவுக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள்தாம்!

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. அப்னா தல் என்கிற கட்சியுடன் இணைந்து பி.ஜே.பி. 80 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்மாநிலத்தில் பி.ஜே.பி. பெரும் சறுக்கலைச் சந்திக்கும் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், 55 தொகுதிகளில் பி.ஜே.பி. முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 50.9 சதவிகிதத்துக்கு மேல் பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 12 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சியான அப்னா தல் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. மாயாவதியின் சமூகமான ஜாதவ், அகிலேஷின் சமூகமான யாதவ் சமூகங்களை தவிர்த்து மற்ற சமூகங்களை வசப்படுத்தும் வகையில் தனது பிரசாரத்தை பி.ஜே.பி. கட்டமைத்து இருந்தது. தற்போது பதிவாகியுள்ள வாக்குகளைப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் யாதவ் சமூக வாக்குகளும் பி.ஜே.பி.க்கு அதிகம் விழுந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். பி.ஜே.பி.யின் வேகத்தைக் கண்டு உ.பி.யில் எதிர்க்கட்சிகள் அரண்டு போயுள்ளன.

Vikatan