Published:Updated:

அமைதியாக இருந்து சாதித்த நவீன் பட்நாயக்! - ஐந்தாவது முறையாக அரியணை ஏறுகிறார்

தமிழகம், கேரளாவை அடுத்து தேசியக் கட்சிகள் நுழையமுடியாத மாநிலமாகத் திகழ்வது ஒடிசா. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.  

அமைதியாக இருந்து சாதித்த நவீன் பட்நாயக்! - ஐந்தாவது முறையாக அரியணை ஏறுகிறார்

அங்கு காங்கிரஸ், பா.ஜ.க, பிஜு ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தனர். இந்த முறை நவீன் பட்நாயக் ஆட்சி ஊசலாடும் எனக் கூறப்பட்டநிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 83 இடங்கள் முன்னிலை பெற்று கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்துள்ளார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் மீண்டும் ஒடிசா முதல்வராக அரியணை ஏறவுள்ளார்.

அமைதியாக இருந்து சாதித்த நவீன் பட்நாயக்! - ஐந்தாவது முறையாக அரியணை ஏறுகிறார்

ஒரு வருடத்துக்குக் குறைந்தது ஒருமுறையேனும் பேரிடர்களைச் சந்திக்கும் மாநிலத்தில் முதலில் உள்ளது ஒடிசாதான். அது போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுடன் துணை நின்று அவர்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் உடனடியாகச் செய்து தருவதில் நவீனை அசைக்கவே முடியாது. இவரின் இந்தச் செயல்பாடுகளே மீண்டும், மீண்டும் அவரை முதல்வர் பதவியில் அமரவைத்துள்ளன. ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க 15 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 
 
Vikatan
அடுத்த கட்டுரைக்கு