Published:Updated:

கரூர், அரவக்குறிச்சியில் யார் முன்னிலை? - ஜோதிமணி, தம்பிதுரை, செந்தில் பாலாஜி நிலை!

துரை.வேம்பையன்
கரூர், அரவக்குறிச்சியில் யார் முன்னிலை? - ஜோதிமணி, தம்பிதுரை, செந்தில் பாலாஜி நிலை!
கரூர், அரவக்குறிச்சியில் யார் முன்னிலை? - ஜோதிமணி, தம்பிதுரை, செந்தில் பாலாஜி நிலை!

கரூர் நாடாளுமன்றத் தாெகுதிகளில் பதிவான வாக்குகள் காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும் போட்டியிடுகின்றனர். முதல் சுற்றிலேயே ஜோதிமணி முன்னிலையில் இருந்து வருகிறார்.

கரூர், அரவக்குறிச்சியில் யார் முன்னிலை? - ஜோதிமணி, தம்பிதுரை, செந்தில் பாலாஜி நிலை!

முதல் சுற்று நிலவரம்

ஜாேதிமணி: 35110
தம்பிதுரை: 15447
முன்னிலை: 19663

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும் அ.தி.மு.க சார்பில் செந்தில்நாதனும் களத்தில் உள்ளனர். முதல் சுற்றில் செந்தில் பாலாஜியே முன்னிலை வகிக்கிறார்.

முதல் சுற்று....

செந்தில் பாலாஜி: 5102
செந்தில்நாதன்: 3911
அ.ம.மு.க வேட்பாளர் பி.ஹெச்.சாகுல் ஹமீது: 347
முன்னிலை: 1191

2ம் சுற்று நிலவரம்.

2 ம் சுற்றில் 14 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இவற்றில் இரண்டாம் சுற்றில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி 5285 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் நாதன்  4108 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 1177 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை.